
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தேர்தலை நோக்கி நுழைந்துள்ளது. ஆளும் திமுக அரசை நாலாபுறமும் சுற்றி வளைக்கும் வகையில், ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலிருந்து தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள், விரைவில் சூடு பிடிக்கவுள்ளது,எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியெதிர் அரசியல், நடிகர் விஜய்யின் புதிய அரசியல் வருகை, மேலும் கூட்டணிக்குள் இருந்து எழும் காங்கிரஸின் மெல்லிய எச்சரிக்கை குரல் – இவை அனைத்தும் சேர்ந்து திமுகவுக்கு ஒரு பெரிய அரசியல் சோதனையை உருவாக்கியுள்ளன.
வரும் காலங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை முழுமையாக களமிறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பலமாக பேசப்படுகிறது. திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மீதான வழக்குகள், விசாரணைகள் தீவிரமடைய உள்ளது. இதிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை திமுக குறிப்பாக கே.என்நேருவை விசாரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடவுள்ளது. இது பல சீனியர் அமைச்சர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதே நேரத்தில், அரசியல் களத்தில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளவர் நடிகர் விஜய். தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் திமுகவை “நேரடி அரசியல் எதிரி” என அறிவித்திருப்பது, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே திமுகவுக்கு எதிரான மன நிலையை ஏற்படுத்தியுள்ளது. திராவிட மாடல் அரசியலின் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
இந்த நிலையில் கூட்டணிக்குள் இருந்து வரும் காங்கிரஸின் அசைவும் திமுகவுக்கு இன்னொரு தலைவலியாக மாறியுள்ளது. சீட் ஒதுக்கீடு, அதிகாரப் பங்கீடு போன்ற விஷயங்களில் திமுக ஆட்சியின் குறைகளை காங்கிரஸ் பட்டியலிட தயாராக இருப்பதாக பேசப்படுவது, பேரம் பேசும் அரசியல் எனவே பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ்–திமுக கூட்டணி தவிர்க்க முடியாதது என்பதால், கடைசி நேர சமரசம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிறிய கட்சிகள் வெளியேறினால் அது திமுகவின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதற்கிடையில், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ‘திராவிட மாடல்’ என்பதை “விளம்பர மாடல்” என சாடி வருகிறார். இது மக்களிடையேசற்று எடுப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருள் நடமாட்டம், நிர்வாக அலட்சியம் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து அவர் நடத்தும் தாக்குதல், திமுகவுக்கு எளிதாக கடக்க முடியாத ஒன்றாக உள்ளது. இதற்கு பதிலாக, அதிமுக–பாஜக இடையிலான கூட்டணி குழப்பங்கள், மறைமுக உடன்பாடுகள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்க திமுக திட்டமிட்டு வருகிறது. அதை முறியடிக்க தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டு புதிய கட்சிகள் கூட்டணிக்கு கொண்டு வர பிளானை தயார் செய்து விட்டது டெல்லி.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது கொள்கைகளை தாண்டி, மக்களின் ‘யாருக்கு ஓட்டுப் போடக்கூடாது’ என்ற மனநிலையை சார்ந்து அமையப்போகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களின் பலவீனமான இடங்களை உணர்ந்து இப்போதுதான் இளைஞர்களை ஈர்க்க முயல்கின்றன.பாஜகவோ அண்ணாமலையை வைத்து இளைஞர்களை ஏற்கனவே கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் களமிறங்கியுள்ளர் இவர் திமுக ஓட்டுக்களை சிதறடிக்க வாய்ப்பு உள்ளது. கூட்டணி கணக்குகளே வெற்றியாளரை தீர்மானிக்கும். தமிழக அரசியல் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான மற்றும் சவாலான தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது.
