24 special

நினைத்து பார்க்க முடியாத பயங்கரம்... ஜெயில் கெத்தா? வன்முறை மாஸா? அப்பா ஆடசியில் ஆபத்தான தலைமுறை

MKSTALIN
MKSTALIN

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விகுறியாகி உள்ளது.எங்கு பார்த்தாலும் கொலை. போதை புழக்கம் என தலைவிரித்து ஆடுகிறது. அதிலும் சிறார்களின் குற்றங்கள் தான் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின்  திருத்தணியில் அண்மையில் நிகழ்ந்த கொடூர சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட குற்றச் சம்பவம் அல்ல; சமூகத்தின் ஆழத்தில் ஊடுருவி வரும் ஆபத்தான கலாச்சார மாற்றத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.   வெட்டுனா ஜெயிலு.. போன புழலு.. இறங்குனா பெயிலு என்று ரைமிங்காக பேசும் இளைஞர்கள் பலர் இப்போது டிரெண்டாகி வருகிறார்கள். இப்படி பேசுவது.. குற்றச்செயல்களில் ஈடுபடுவது இப்போது சில இளைஞர்கள் மத்தியில் "கூல்" ஆகிவிட்டது.


ஒருபுறம் கட்டுப்பாடற்ற போதைப்பொருள் புழக்கம், மறுபுறம் திரையில் தொடர்ச்சியாகக் காட்டப்படும் அதீத வன்முறை—இந்த இரண்டும் இணைந்து இளைஞர் மனங்களை எந்த அளவுக்கு விஷமப்படுத்தி வருகிறது என்பதற்கான எச்சரிக்கை மணி தான் இந்த சம்பவம்.இது ஒருபுறம் என்றால் 10 கேஸ் வாங்கினால் தான் வீரன்", "ஜெயிலுக்கு போனவன் தான் கெத்து" என்று ரவுடிசத்தை வீரமாகப் போதித்து இளைஞர்களைக் குற்றவாளிகளாக்குகிறது ஒரு கும்பல். அது மட்டுமா வக்கீலை தாக்கி விட்டு சென்றார்கள் பார் கவுன்சில் உள்ளே சென்று தாக்க முயன்றார்கள் இதற்கு எல்லாம் யார் பொறுப்பு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 

இவர்கள போன்ற அரசியல்வாதிகளின் சுய லாபத்திற்காக இன்றைய தலைமுறையை நாசமாக்கி வருகிறார்கள். இது ஒருபுறம் என்றால் ரஞ்சித் அட்டகத்தி படத்தில் காதலிக்கும் பெண்ணை முதலில் முடித்துவிடவேண்டும் என்ற வசனம்.. எந்த மாதிரியான சமூகத்தை உருவாக்கும்... இது போதாதென்று அசுரன், வடசென்னை, அரசன், லியோ, ரெட்டோ உள்ளிட்ட படங்களின் வன்முறை காட்சிகளும், பாடல்களும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு, “வன்முறை = மாஸ்” என்ற மனநிலையை விதைத்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் வெளியான பல திரைப்படங்களில், வில்லன் மட்டுமல்ல—ஹீரோவே வன்முறையை நியாயப்படுத்தி கையில் எடுக்கும் காட்சிகள் அதிகரித்துள்ளன. நல்ல நோக்கத்துக்காக என்ற பெயரில் காட்டப்படும் இந்த வன்முறை, காட்சிப்படுத்தும் விதத்தில் ஒரு கொண்டாட்டமாக மாற்றப்படுவதே ஆபத்தானது என சமூக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதையே சில இளைஞர்கள் வாழ்க்கை மந்திரமாக எடுத்துக்கொண்டு, குற்றச் செயல்களை ‘கெத்து’ காட்ட ரீல்ஸ்களில் இறங்குகின்றனர்.

“பணம் சம்பாதிக்கிறோம்” என்ற பெயரில் வன்முறை கதைகளை தொடர்ச்சியாக திரையிலே திணிப்பது, இளைஞர்களை தவறான பாதைக்கு தள்ளும் முக்கிய காரணம்..  வன்முறையால் அழிந்தவர்களின் கதையை எடுக்கிறோம் என்று கூறிக்கொண்டு, அதையே ஸ்டைலாகவும் மாஸாகவும் காட்டுவது சமூகப் பொறுப்பின்மையின் உச்சம். 

அதுமட்டுமல்ல, குற்றம் செய்து சிறைக்கு போவது கூட “ரியல் ஹீரோயிசம்” போல சித்தரிக்கும் ரீல்ஸ் கலாச்சாரம், புதிய தலைமுறைக்கு மிகப்பெரிய விஷமாக மாறி வருகிறது. இத்தகைய சமூக வலைதள கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும், வன்முறையைத் தூண்டும் கானா பாடல்கள் மற்றும் பாடகர்களை கண்காணித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தனிப்பட்ட மானிட்டரிங் கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில், தேர்தல் நேரங்களில் ஓட்டுக்காக  பல குற்றச்செயல்கள் மறைக்கப்படும் வருகிறது. அதற்கு செய்தி ஊடகங்களும் துணை போவது தான் இன்றைய தமிழ்கத்தில் நிலை. ஜாபர் சாதிக் அனைவர்க்கும் தெரிந்த பெயர் முதல்வர், துணை முதல்வர் திமுகவில் பதவி வகித்து கொண்டு போதை பொருள் கடத்தல் மன்னனாக வலம்வந்தான்.. அதை மத்திய போதை தடுப்பு பிரிவுதான் கண்டுபிடித்தது. இவை அனைத்தும் அதிகா பசிக்காக  தேசத்தின் எதிர்காலத்தை சிதைக்கும் செயல். இளம் தலைமுறையை சிதைத்து வருகிறார்கள்., இதனை மக்கள் புரிந்து கொண்டால் தான் இந்த தலைமுறையை காப்பாற்ற முடியும். திரையில் “போதை” ஒரு கொண்டாட்டமாக மாற்றப்படக்கூடாது.“பணம் சம்பாதிப்பதை விட சமூகப் பொறுப்பு முக்கியம்” என்பதை உணர வேண்டும்.. வரும் தேர்தல் வருங்கால தலைமுறைக்கானது.