திரைத்துறையில் கிடைத்த பெரும் பேராதரவு மற்றும் மக்கள் மீது கொண்ட பேரன்பால் 2005 ல் விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்தார். அப்பொழுது மதுரையில் நடந்த தேமுதிகவின் முதல் மாநாட்டில் குவிந்த விஜயகாந்த் ரசிகர்களால் ஒட்டுமொத்த மதுரையே திக்கு முக்காடியது. மேலும் அதிமுக மற்றும் திமுகவிற்கு நிகரான கட்சியாக தேமுதிக தொடங்கப்பட்டது. இதற்குப் பிறகு நடந்த இரண்டு தேர்தல்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றி தேமுதிகவிற்கு கிடைக்கவில்லை என்றாலும் அதன் வாக்கு சதவிகிதமும் 10.3% உயர்ந்தது. இதற்குப் பிறகு 2011 தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தனது நிலையை மாற்றிக் கொண்ட விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார். அப்பொழுது தேமுதிகவிற்கு 41 தொகுதிகள் கிடைத்தது. அதில் 29 இடங்களில் வெற்றி பெற்று 7.9% வாக்குகளை பெற்றது தேமுதிக.
மேலும் தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்த தேமுதிக பிறகு அதிமுக உடனான கூட்டணியை முறித்து கொண்டது. அதோடு தேமுதிகவின் நிர்வாகிகள் பலர் அதிமுகவிற்கும் தாவினர் இதற்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக, பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் விசிக மற்றும் மதிமுகவுடனும், 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலும் போட்டியிட்டது. இருப்பினும் அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இதற்கிடையிலேயே விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போக அடிக்கடி அவரால் தொண்டர்களிடையே பேச முடியாத நிலையில் ஏற்பட்டது.
இப்படி தொடர்ச்சியாக விஜயகாந்த் கூட்டணி பக்கம் திரும்பியதில் இருந்து தோல்வியைத் தழுவி வந்தது தேமுதிக. இதனை அடுத்து விஜயகாந்தின் உடல்நிலை மேலும் சரிவை சந்திக்க தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் பிரேமலதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு விஜயகாந்த் உடல்நல குறைவால் மறைந்தார். அவரது மறைவிற்குப் பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலும் வந்தது. அதில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர் (தனி), வட சென்னை ஆகிய ஐந்து தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால் திருவள்ளூர் மற்றும் வடசென்னை ஆகிய தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். ஆனால் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எப்படியும் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோகி இருந்தது.
இருப்பினும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக மற்றும் பாஜக தரப்பின் வேட்பாளர்கள் மிகவும் வலுவாக இருந்ததாலும் விஜய பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் களம் பெரும் போராட்டத்தை சந்தித்தது. இறுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 4379 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். விஜய பிரபாகரன். இதற்குப் பிறகு தேமுதிக என்ன ஆகும் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
அதுமட்டுமின்றி தேமுதிக கூட்டணி அமைப்பதில் சரியான முடிவை எடுக்கவில்லை என்றும் விஜயகாந்தின் மரணம் தேமுதிகவை வீழ்ச்சிக்கும் கொண்டுபோய் சென்று விட்டது. ஆனால் அந்த சமயத்தில் நடைபெற்ற தேர்தலில் விஜய பிரபகரனுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது அனுதாபத்தில் மட்டும் தான்! இந்த முறையும் தேமுதிக தோல்வியை தழுவி விட்டது. இதனால் இனி அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் விஜய பிரபாகரன் தற்போது பெற்ற வாக்குகளை மீண்டும் பெறுவாரா என்றால் அதுவும் சந்தேகம்தான், எனவே இப்பொழுது இருந்தே தேமுதிக மக்கள் பிரச்சினைகளுக்கு மிகவும் அழுத்தமான குரலை எழுப்ப வேண்டும் என அரசியல் விமர்சிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.