இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பத்மனாபசுவாமி திருக்கோவிலானது அமைந்துள்ளது. இங்கு மூலவராக மகாவிஷ்ணு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இது கேரளாவில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கோட்டைக்குள் அமைந்திருக்கும் கோவிலாகும். மேலும் இந்த கோவையானது விஷ்ணு கூறிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்தலமாகவும், மிகவும் புனிதமான கோவில்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான பத்மனாப சுவாமி மகாவிஷ்ணுவின் அவதாரமானது துயில் கொண்டு முடிவற்ற உறக்க நிலையில் இருப்பது போல அமைந்திருப்பது தனி சிறப்பாக உள்ளது. இவ்வாறு உரக்க நிலையில் உள்ள விஷ்ணுவை அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு அமைந்திருக்கும் இறைவன் 18 அடி நீலம் கொண்டு பெரிய நாகத்தின் மீது படுத்து இருப்பது போல காட்சி அளித்து வருகிறார். கோவில் பற்றிய குறிப்புகள் பல புராண நூக்களிலும் சகந்த புராணம் மற்றும் பத்ம புராணம் போன்ற நாட்களிலும் இடம்பெற்றுள்ளது.
இங்கு அமைந்திருக்கும் விஷ்ணு முனிவர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்ததாக வரலாறுகள் கூறி வருகிறது. மேலும் இந்த கோவிலில் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் ஹனுமான் மீது பூசப்படும் வெண்ணையானது எப்படிப்பட்ட வெயில் காலத்தில் கூட உருகாத நிலையில் இருக்குமாம்!! எவ்வளவு நாட்கள் ஆனாலும் அந்த வெண்மையானது கெட்டுப் போகவே போகாது என்று பக்தர்கள் கூறி வருகின்றனர். கோவிலில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் பைங்குனித் திருவிழா மார்ச் ஏப்ரல் மாதம் நடைபெறும். இந்த திருவிழாவானது கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றாகவும் அதிக அளவில் மக்கள் கூடும் திருவிழாவாகவும் இருந்து வருகிறது. மேலும் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு குழந்தை இல்லாதவர்கள் சென்று வந்தால் அந்த மகாவிஷ்ணுவே கிருஷ்ண அவதாரத்தில் வந்து குழந்தையாக பிறப்பார் என்று நம்பப்படுகிறது. மேலும் வாழ்வில் பல நிலைகளில் கஷ்டப்பட்டு வருபவர்கள் இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று ஸ்ரீ பத்மனாபசுவாமியை வழிபட்டு வந்தால் அவர்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.