24 special

"கிளீன் தமிழ்நாடு" உத்திர பிரதேச பாணியில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய டிஜிபி சைலேந்திர பாபு..!

Yogi adityanath
Yogi adityanath

உத்திர பிரதேசத்தில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நபர்கள், குற்றவாளிகள் ரவுடிகள் போன்றோரின் சொத்துக்களை முதல்வர் யோகி தலைமையிலான காவல்துறை முடக்கி வருகிறது, அதோடு நில்லாமல் தப்பி ஓடும் நபர்களின் சொத்துக்களை பல இடங்களில் புல் டோசர் மூலம் அகற்றி வருகிறது.


இந்த சூழலில் தமிழகத்தில் அதே பாணியில் போதை பொருள் கடத்தும் கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக ஆபரேஷன் கிளீன் தமிழ்நாடு என்ற திட்டத்தை தமிழக காவல்துறை தொடங்கியுள்ளது, குற்றத்தில் ஈடுபட்ட நபர்களின் சொத்துக்கள், பணம், வங்கி கணக்கு என பறிமுதல் மற்றும் முடக்கப்பட்டு உள்ளன.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்வோரின் வங்கி கணக்கு மற்றும் சொத்துகளை முடக்க தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்க தமிழக காவல்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக கஞ்சா வேட்டை ஆபரேஷன் தொடங்கி தீவிரமாக குட்கா மற்றும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் கஞ்சா வேட்டை 1.0-வில் கஞ்சா, குட்கா, ஹெராய்ன் போன்ற போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட மொத்தம் 8929 பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2299 கிலோ கஞ்சா, 40 டன் குட்கா மற்றும் போதை பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்திய 197 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேலும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் மொத்த வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும், சட்டவிரோதமாக வாங்கிகுவித்த சொத்துகளையும் முடக்கி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கஞ்சா கடத்துவோர், விற்போர் மற்றும் பதுக்குவோர், இந்த குற்றத்தின் மூலமாக சம்பாதித்த அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பல குற்றவாளிகள் தாங்களாக தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண்டர் ஆகி வருகின்றனராம், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதே சொத்து சேர்க்க தான் எனவும் அந்த சொத்தையே அரசு முடக்கினால் என்ன செய்வது என்ற பயத்தில் குற்றவாளிகள் மிரண்டு போயி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கை பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இதே போன்று மற்ற குற்றங்களையும் குறிப்பாக பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் சொத்துக்களை யோகி அரசு முடக்குவது போன்று தமிழக காவல்துறையும் நடவடிக்கையில் இறங்கினால் நன்றாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.