24 special

பொய் சொல்லிவிட்டாரா திருமாவளவன், சர்ச்சையாகும் தகவலால் கேலி கிண்டல்..!

Thirumavalan
Thirumavalan

அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதி எந்த ஆண்டும் இல்லாத வகையில் பாஜக விசிக மோதலாக உருமாறி வருகிறது, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பான மோதலில் இரு தரப்பிலும் பாதிப்புகள் உருவாகி இருக்கும் சூழலில் விசிக தலைவர் திருமாவளவன் பாஜகவிற்கு அம்பேத்கரை கொண்டாடும் உரிமை இல்லை என குறிப்பிட்டார்.


இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை அம்பேத்கரை உண்மையாக கொண்டாட தகுதி உள்ள இயக்கம் பாஜக தான் என எடுத்து கூற நேரடி விவாதத்திற்கு தயார் நேரம் இடத்தை மட்டும் கூறுங்கள் என்று தெரிவித்தார் அண்ணாமலை இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் இணையத்தில் அடுத்த பஞ்சாயத்து எழுந்துள்ளது.

ஏப்ரல் 14-ம் தேதி அன்று நான் முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்கை தொடங்கினேன் என குறிப்பிட்டார் திருமாவளவன் இது குறித்து அவர் தெரிவித்ததாவது, எனது பெயரில் முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்கு தொடங்கப் பெற்ற நாள்தான் இன்றைய ஏப்ரல்14 (2016). இந்த ஆறு ஆண்டுகளில் எனது பதிவுகளுக்கு ஊக்கமளித்து ஆதரவு நல்கி வரும் யாவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக எனது பதிவுகளைப் பகிரவும் புதியவர்கள் இணையவும்..இயலாத வகையில் முகநூல் முடக்கப்பட்டது. எனினும் இக்கணக்கில் 3,33,450க்கும் மேலானோரும் ட்விட்டர் கணக்கில் 4,80,000க்கும் மேலானோரும் தன்னியல்பான (organic)  பின்தொடர்வோராக (followers) இடம் பெற்றுள்ளனர்.புதியவர்கள் மென்மேலும் இணையவும், எனது பதிவுகளைப் பகிரவும் அழைப்பு விடுக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.



ஆனால் திருமாவளவனின் ட்விட்டர் பக்கம் 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதாக ட்விட்டரில் குறிப்பில் இருக்கிறது, எனவே திருமாவளவன் தவறான தகவலை கொடுத்து இருக்கிறாரா? தகவலை மாற்றி பொய் தகவல் தெரிவித்து இருக்கிறாரா போன்ற பல்வேறு கேள்விகளை பலரும் வைத்து வருகின்றனர்.