24 special

விரைவில் கைமாறும் தி.மு.க! சபரீசன் VS உதயநிதி நீடிக்கும் பனிப்போர்!

dmk
dmk

தமிழக அரசியல் களம் தொடர்ந்து சூடுபிடித்து கொண்டே வருகிறது. தேர்தலில் சமயத்தில் மட்டுமே அரசியல் களம்  பரபரப்பாக இருக்கும்.ஆனால் தற்போது தேர்தல் முடிந்தும் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3 வது முறையாக ஆட்சி அமைக்கிறது. மோடி அவர்கள் மீண்டும் பிரதமாகிறார். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளை வென்றாலும் திமுகவின் ஒட்டு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. 


அதிமுகவை பொறுத்தவரையில் பல பாராளுமன்ற தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக பல இடங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. நாம்தமிழர் ஓட்டு சதவீதமும் குறிப்பிட்ட அளவிற்கு அதிகரித்துள்ளதால் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இப்படி தமிழக அரசியல் களம் சற்று மாற தொடங்கியுள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சிகளும் ஆலோசனையை தொடங்கியுள்ளது. திமுக 40 தொகுதிகளை வென்றாலும் அதன் தலைமை பெரும் அப்செட்டில் உள்ளதாம். ஏனென்றால் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலைவிட, இந்த தேர்தலில் திமுக கூட்டணி மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, 38 தொகுதிகளில் வெற்றி பெற்று, 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இந்த தேர்தலிலும் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இறுதி நிலவரப்படி, திமுக கூட்டணி 46.97 சதவீதம் வாக்குகளை பெற்றது. அதேபோல், தனிப்பட்ட முறையில் கடந்த 2019-ல் 33.53% வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் 26.93% பெற்றுள்ளது. மேலும் இந்த தேர்தலில் 2019 மக்களவைத் தேர்தலின்போது 3.69 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. எந்த இடங்களிலும் போட்டியிடாத நிலையில், அந்தக் கட்சியின் வாக்குகள் திமுக கூட்டணி வெற்றி சதவீதத்தில் எந்தஅளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்பது தற்போதைய வாக்கு சதவீதத்தில் கணிக்க இயலாததாக உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

மேலும் 2014-ல் பாஜகவின் வாக்கு சதவீதம் 5.56%, 2019-ல் 3.62% என்றிருந்த நிலையில் ஒரே பாய்ச்சலாக இம்முறை 11.24% ஆக அதிகரித்துள்ளது.இந்தத் தேர்தலில் இளம் வாக்காளர்களின் பங்கு முக்கியமாக பிரதிபலித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஓட்டுகள் சிதறியுள்ளது தெளிவாக காணமுடிகிறது. இது ஓருபுறம் இருக்க திமுகவின் மேலிட பிரச்சனைகள் வெளியே வர தொடங்கியுள்ளது. இதுவரை பனிப்போராக இருந்த உதயநிதி சபரீசன் மோதலை சமாதானப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உடல்நிலை குறித்தும் அறிவாலய வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது. உதயநிதியை பாரளுமன்ற தேர்தலுக்கு முன்னரே துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என பேசப்பட்டது. 

இதற்கு சபரீசன் தான் முட்டுக்கட்டை போட்டுள்ளார். உதயநிதியை தற்போது துணைமுதல்வர் பதவி கொடுத்தால் தேர்தலில் திமுக வீழ்ச்சியடையும் என ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.இதன் பின் தான் உதயநிதி கப்சிப் ஆனார். தேர்தல் முடிந்த கையோடு லண்டன் பறந்தார். தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கையில் அவர் அவேசம் பாடலுக்கு ரீல் போட்டு கொண்டிருந்தார். உதயநிதி தனது சகாக்களை வைத்து சபரீசன்க்கு எதிராக காய் நகர்த்த துவங்கினார். இந்த தேர்தலில் திமுகவிற்கு  சபரீசனின் சகோதரி நிறுவனமான, 'பென்' வியூக வகுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தது.தி.மு.க.,வுக்கும், ஆட்சி நிர்வாகத் திட்டங்களுக்கும் வியூகம் வகுத்துக் கொடுத்தது. பென் நிறுவனம் வெறும் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளது, எந்தவித வியூகமும் அமைக்கவில்லை பென் நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்த வியூகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என உதயநிதி ஸ்டாலினிடம் கூறியுள்ளாராம். அதன் பின் தான் மீண்டும் பிரசாந் கிஷோரிடம் பேசியுள்ளது திமுக. 

இதனால் கட்டுப்படைந்த சபரீசன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார். திமுகவின் அடுத்த பொறுப்புக்கு கனிமொழிக்கு ஆதரவாக காய்களை நகர்த்தியுள்ளார், இது தெரிந்த ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உதயநிதியையம் சபரிசனையும் சேர்த்து வைக்கும் முயற்ச்சியில் முதல்வர் வட்டாரம் இறங்கியுள்ளதாம்.ஸ்டாலின் அவர்கள் மருத்துவபரிசோதனைக்காக  சில காலம் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் உதயநிதியை துணைமுதல்வராக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார்கள். துர்கா ஸ்டாலின் அவர்கள் தான் சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாராம்.