Cinema

பேட்டியில் நடிகர் விஜய் குறித்து உண்மையை உடைத்த வனிதா விஜயகுமார்!!! கப்பலேறிய தளபதி மானம்....

VIJAY
VIJAY

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவிற்கு மூத்த மகளாக பிறந்தவர்தான் வனிதா!! இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும்  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். முதல் முதலில் சந்திரலேகா என்னும் திரைப்படத்தில் 1995 ஆம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் நம்பிராஜன் இயக்கத்தில் சிறிய கிராமத்தில் இந்த திரைப்படமானது எடுக்கப்பட்டு வந்தது. இந்த திரைப்படம் எடுக்கும் பொழுது நடிகர் விஜயும் ஒரு சிறிய நடிகராகவே இருந்தார் என்பதால் அவருக்கும் இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. மேலும் வனிதா விஜயகுமாருக்கும் இந்த திரைப்படம் தான் முதல் திரைப்படம் என்பதால் திரைப்படங்களை பார்ப்பவர்களும் புதுமுகம் என்று எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்து சென்றனர் இந்த திரைப்படம் இவர்கள் இருவருக்குமே தரக்கூடியதாக அமையவில்லை.


அதன் பிறகு நடிகர் விஜய் பல திரைப்படங்களில் நடித்து இன்று ஒரு பிரபலமான நடிகராகவும் ரஜினி, கமலுக்கு அடுத்து அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகர்களின் வரிசையில் இருந்து வருகிறார். நடிகர் விஜய் தொடர்ந்து எக்கச்சக்கமான திரைப்படங்கள் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து தற்போது அரசியலிலும் நுழைந்துள்ளார். இனிமேல் முழுவதுமாக அரசியல் மட்டும் இருக்கப் போவதாக அறிவித்த நடிகர் விஜய் கடைசியாக இரண்டே திரைப்படங்கள் நடித்து வருகிறார். அந்த இரண்டு திரைப்படங்கள் முடிந்த பிறகு வேறு எந்த திரைப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்றும் அரசியலில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால் வனிதா நடிகர் விஜயின் ஆரம்ப காலத்திலேயே அவருக்கு ஜோடியாக நடித்து இன்றுவரையிலும் சினிமா துறையில் இருந்து வந்தாலும் கூட விஜய் அடைந்த வெற்றியை இன்று வரையிலும் அவரால் அடைய முடியாமல் இருந்து வருகிறது. ஆனால் வனிதா தொடர்ந்து பல சர்ச்சைகளில் மாட்டி வருவது எப்போதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. 

 நடிகை வனிதா முதலில் ஆனந்த் ஜெய் என்னும் இயக்குனரை திருமணம் செய்து விவாகரத்து செய்து இதன்பிறகு நடன இயக்குனரான ராபர்ட் என்பவருடன் டேட்டிங் செய்து வந்ததாகவும் அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் பிரேக்கப் ஆனதாகவும் சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்தது. அதன் பிறகு பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சியான பிக் பாஸ் தொடரில் பங்கேற்று அதன் பிறகு பீட்டர் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணமும் நிலைத்திருக்காமல் விவாகரத்தில் முடிந்தது. இதனால் தொடர்ந்து பல சர்ச்சைகளில் மாட்டி அனைவரும் வனிதாவின் செயலை எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த சர்ச்சைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்தார். நிலையில் தற்பொழுது வனிதா பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பது என்னவென்றால்...

 விஜய் தற்பொழுது நடித்து வரும் திரைப்படத்தின் பெயர் கோட் என்று ஆங்கிலத்தில் வைத்திருப்பது குறித்து பேட்டியில் வனிதாவிடம் பத்திரிக்கையாளர்கள் கருத்துக்களை  கேட்டுள்ளனர். இந்த கேள்வியை தொடர்பு வனிதா " விஜய்யை எனக்கு வாய்ப்பு கொடுக்கலைங்க!! தமிழ் நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கலைங்க!! முதலில் அதை கேட்போம்!!" எனக் கூறியுள்ளார். தமிழ் நடிகைகளுக்கே வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது இதுல படத்துக்கு தமிழ் பெயர் வைக்கலைன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க அப்படி என்று நடிகை வனிதா கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் தற்பொழுது அரசியலில் நுழைந்துள்ளதால் அந்தக் கட்சியில் ஏதாவது பதவி கிடைத்தால் நீங்கள் போவீங்களா??அப்படி என்று பத்திரிக்கையாளர் கேள்வி கேட்க.. அதற்கு வனிதா தற்பொழுது சினிமாவில் நடிப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருவதாகவும், ஆனால் நடிகர் விஜய்க்கு எப்பொழுதுமே அன்பும்,  ஆதரவும் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.