
கொடுக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகளில் பாதியாவது நிறைவேற்றினீர்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்த பொழுது அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்படும் அதற்கான விண்ணப்பங்கள் நியாய விலை கடைகள் மூலம் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியானது.
அதன்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விண்ணப்ப நடவடிக்கைகள் முடிவு பெற்றது. ஆனால் இந்த திட்டத்திற்கான வரைமுறையை தமிழக அரசு வரையறுத்த பொழுது ஆரம்பத்தில் ஒன்று கூறிவிட்டு தற்போது ஒன்று கூறுகிறார்கள் என்ற மனநிலையும்! கொடுத்தால் பொதுவாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் பெண்கள் தரப்பில் முன் வைக்கப்பட்டது. இருப்பினும் திமுக தரப்பில் வரையறுக்கப்பட்ட வரைமுறைகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு திட்டமும் செயல்படுத்தப்படும் ஏனென்றால் இது ஏழை எளிய மக்களுக்குகாக தொடங்கப்பட்டது என்று கூறப்பட்டது.
அதோடு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை தொகைய திட்டம் தொடங்கப்பட்டு இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகம் விளங்குவதாகவும் இதுவரை எந்த அரசும் செய்யாத ஒரு அதிரடி திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும் பெருமிதத்தில் திக்கு முக்காடி இருந்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.
இது மட்டுமல்லாமல் முதல்வர் கூறியதுபடியே மகளிர் உரிமை தொகை அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது, அதுவும் அறிவித்த ஒரு நாளுக்கு முன்னதாகவே சிலர் தனது வங்கி கணக்குகளில் பணத்தைப் பெற்று அது குறித்த அறிவிப்புகளையும் வீடியோக்களையும் திமுக அரசு தரப்பில் இருந்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது, செய்திகளும் இது குறித்து பரவி மக்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தையும் யாருக்கெல்லாம் பணம் வந்திருக்கிறது என்ற ஹாஸ் டாக் டிரெண்ட் ஆகும் வரையில் இது குறித்த அதிர்வலைகள் தமிழகம் முழுவதும் எழுந்தது.
இந்த நிலையில் இந்த திட்டம் துவங்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பூகம்பம் வெடித்துள்ளது. அதாவது வரைமுறைப்படி சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மறுபடியும் மேல்முறையீடு செய்யலாம் அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது.
அதன்படி உரிமைத்தொகை பெறாத குடும்ப தலைவிகள் அனைவரும் அதற்கான காரணத்தையும் மேல்முறையீடு செய்வதற்காகவும் இ சேவை மையங்களையும் அலுவலகங்களையும் நாடி சென்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அங்கு எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படாததால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு குடும்ப தலைவிகள் முற்றுகை இட்ட செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற சம்பவம் திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை போன்ற பல மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு தரப்பில் இருந்து மகளிர் உரிமை திட்ட பயனாளர்களில் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடாமல் இருப்பதாகவும், இதுகுறித்து மேல்முறையீடு செய்வதற்காக அல்லது விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்வதற்காக அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட இணையதளமும் முடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் பயன் அடைந்துள்ளார்கள் பயனாளிகள் எத்தனை பேர் என்ற பட்டியலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த பெயர் பட்டியலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அரசு அலுவலகங்கள் குறிப்பாக வருவாய் துறை அலுவலகங்களில் கூறப்படுகிறது.
இதனால் தங்களை தேடி வரும் மக்களிடம் பதிலளிக்க முடியாமல் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் அதன் காரணமாக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இப்படி இருக்கும் பட்சத்தில் அரசு இயந்திரம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் திமுக அரசு திட்டத்தை தொடங்கிய இரண்டு நாட்களிலேயே மிகப்பெரிய பூகம்பத்தை சந்தித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி அறிவாலயத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.