24 special

அடிமடியிலேயே விழுந்த ஆப்பு...! சொந்த மாவட்டத்திலே முதல்வருக்கு வந்த இடி...!

mk stalin
mk stalin

முதல்வருக்கும் திருவாரூர் மாவட்டத்திற்கும் அதிக நெருக்கம் உள்ளதாக முதல்வரே சில மேடைகளில் புகழ்ந்துறை ஆற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நானும் டெல்டா காரன் தான் என்ற பெருமைகளை முன் வைத்த முதல்வர் சமீப காலமாக டெல்டா மாவட்டமாகிய திருவாரூர் பக்கம் கவனம் செலுத்தாமல் இருந்தார் என  சில தகவல்கள் கசிந்தன. முன்னதாக அண்ணாமலை தனது இரண்டாம் கட்ட நடை பயணத்தை டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியானதை அடுத்து உடனடியாக சில ஏற்பாடுகளை செய்து டெல்டா மாவட்டங்களாகிய திருவாரூர் நாகை போன்ற மாவட்டங்களில் தனது இரண்டு நாள் பயணத்தை முதல்வர் மு க ஸ்டாலின் மேற்கொள்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.அந்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் முதல்வர் தான் தங்கி இருந்த சன்னதி தெரு இல்லத்திலிருந்து தேரோடும் வீதிகள் மற்றும் கமலாலய குலத்தை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டார் அது நடைபயிற்சியின் பொழுது மக்கள் ஏராளமானோர் சென்று அவரிடம் உரையாடி வாழ்த்த தெரிவித்ததாக சில வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியானது. 


ஆனால் டெல்டா மாவட்டத்திற்கு மிகவும் முக்கிய தேவையாக இருக்கும் காவிரி நீர் இந்த முறை திறந்து விடப்படாமல் இருந்தது அது மட்டும் அல்லாமல் இனிமேல் காவிரி நீரை தமிழகத்திற்காக திறந்து விட முடியாது என்ற செய்திகளும் பிற மாநிலத்திலிருந்து பெற்ற பொழுதும் தமிழகம் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கொந்தளிப்பில் டெல்டா மக்கள் இருந்தனர். அந்த சமயத்தில் அண்ணாமலை தனது பாதயாத்திரை அங்கு மேற்கொண்டால் அது அவருக்கு சாதகமாக மாறிவிடும் அதனால் அதற்கு முன்பாகவே சென்று விடலாம் என்று இந்த இரண்டு நாள் பயணத்தை முதல்வர் மேற்கொண்டதாகவும் அரசியல் விமர்சகர்களால் விமர்சனம் செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த தேர்தலிலும் கூட மற்ற பகுதிகள் குறிப்பாக கொங்கு பகுதிகளில் திமுக பலத்த அடியை வாங்கிய பொழுது டெல்டா பகுதி தான் அவருக்கு கை கொடுத்தது.

திமுக ஆட்சியில் தற்பொழுது இருக்க டெல்டா பகுதிகளில் இருந்து பெறப்பட்ட வாக்குகள் மற்றும் அங்கு வெற்றி பெற்ற சீட்டுகள் தான் காரணம், இந்த நிலையில் டெல்டாவில் தற்போது முதல்வருக்கு எதிரான அலை வீச துவங்கி உள்ளது. அதாவது கோரை ஆற்றில் இருந்து வரப்படும் தண்ணீர் மூலமாக நீடாமங்கலம் தாலுகாவில் 20,000 ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் வீணாக போவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதாவது காவிரி ஆற்றில் இருந்து வரும் நீர் கோரையாற்றுக்கு திரும்பி விடப்பட்டு அந்த நீரே விவசாய பயன்பாட்டிற்கு அப்பகுதி விவசாய மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் கடந்த 15 நாட்களாக ஆற்றில் இருந்து தண்ணீர் கிடைக்கவில்லை எனவும் அதனால் பயிர்கள் அனைத்தும் வாடி பெருமளவு நஷ்டம் ஏற்படுவதாகவும், குருவை சாகுபடி முழுமையாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால் 30 ஆயிரம் ரூபாய் வரை ஒரு ஏக்கருக்கு இழப்பீடாக தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக பிரச்சனைகள் மற்றும் விவசாயிகளின் நிலைமை மோசம் அடைந்து சென்றிருக்கின்றது. இந்த நிலையில் அண்ணாமலை வேறு வரும் மாதங்களில் டெல்டாவிற்கு தான் நடைபயணம் யாத்திரை செல்ல இருக்கிறார் இந்த நிலையில் ஏதாவது செய்தாக வேண்டும் குறிப்பாக டெல்டா பகுதியின் வாக்கு வங்கியை காப்பாற்ற எதையாவது செய்தாக வேண்டும் என அறிவாலயம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.