
தமிழக அரசியல் வரலாற்றில், செப்டம்பர் 27-ம் தேதி, ஒரு கறுப்பு நாள்! தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கரூர் சுற்றுப்பயணத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, ஒன்றரை வயது குழந்தை முதல் 65 வயது பெண்மணி வரை இதுவரையில் 41 பேர் பலியாகியிருக்கிறார்கள். மரண ஓலத்தால் கதிகலங்கிப்போயிருக்கிறது தமிழகம். ஒட்டுமொத்த தேசத்தையுமே உலுக்கியிருக்கும் இக்கோர மரணங்கள், த.வெ.க மற்றும் காவல்துறையின் அலட்சிய நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.
மேலும் தவெக கோரிய இடத்தை ஒதுக்காதது, அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்தது, காவல்துறையின் பாதுகாப்பு குளறுபடிகள் என்பன உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் சி.பி.ஐ விசாரணைகேட்டார்கள்.,மேலும் எட்டு எம்.பி-க்கள்கொண்ட விசாரணைக்குழுவை அமைத்து, இந்த விவகாரத்தில் சீரியஸாக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது டெல்லி
இந்த நிலையில்உயர் நீதிமன்றம் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தை கிழித்து தொங்கவிட்டது. திமுகவின் வழக்கறிஞர் பிரிவு என்றைக்கும் வலிமையானது, ஜெயலலிதா அவர்களுக்கே பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது கட்சி தொடங்கியிருக்கும் விஜய் திமுகவின் விவாதங்களை முறியடிக்க தவறிவிட்டது. ஒரு வியூக வகுப்பாளரையும், சமூக ஊடக செயல்பாட்டாளரையும், மன்றங்களை ஒருங்கிணைக்கிற ஆனந்த் போன்றவர்களை மட்டும் வைத்து ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது. 41 பேர் மரணம் என்பதும், அதைத் தாண்டி புரட்சி வெடிக்க வேண்டும் என்கிற ஆதவ் அர்ஜுனாவின் சமூக வலைதள பதிவும் ஒட்டுமொத்த நீதித்துறையையும் விஜய்க்கு எதிராக நிறுத்திவிட்டது.
நீதிமன்ற தீர்ப்புகளில் ஒன்று, திரு.அஸ்ரா கார்க் நேர்மையான திறமையான அதிகாரி என்று எல்லா மட்டங்களிலும் பெயரெடுத்தவர், அவர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. அது வரவேற்கத்தகுந்தது, ஆனால் அதன் விளைவு CBI விசாரிக்க வேண்டும் என்கிற முயற்சியை இன்றைய தேதிக்கு தடுத்து விட்டது.
நிலைமை இப்படி இருக்க அரசுக்கு எதிராகவும் காவல்த்துறைக்கு எதிராக மக்கள் மனநிலை மாறி கொண்டிருந்தபோது ஆதவ் அர்ஜினா இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கு எதிராகாவும் கருத்தை பதிவு செய்தது எதற்காக என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே 2021 ஆம் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி வேலை செய்தவர் தான் ஆதவ் அர்ஜுனா. குறிப்பாக மருமகன் சபரீசனுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர். என்பது குறிப்பிடத்தக்கது.
41 பேர் பலியான சம்பவம் திமுகவுக்கு எதிராக மனநிலையை உருவாக்கியது. விஜய் பாஜக அதிமுக கூட்டணி என்ற பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்தது இப்படி இருந்த சூழலில் ஆதவ் அர்ஜுனா இளைஞர்களின் புரட்சி வெடிக்கும் என பதிவை போட்டு ஒட்டு மொத்த அரசியல்களத்தின் போக்கை மாற்றினார். அவர் போட்ட பதிவு உண்மையிலேயே இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்து, இதனால் டெல்லி அப்செட். இதனை தொடர்ந்து சென்னையை விட்டு தப்பி சென்று இருக்கிறார். ஆதவ்.
குற்றம் செய்துவிட்டு இப்படி தப்பித்து ஓடுவது இன்னும் மோசமான நிலையை விஜய்க்கு ஏற்படுத்தி இருக்கிறது. விஜயினுடைய பிரச்சார பேருந்து, அதில் அடிபட்டவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அதை ஓட்டிய பேருந்து ஓட்டுநர் மற்றும் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கிற உத்தரவு விஜய்க்கு நெருக்கடிகளை உண்டாக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க ஆதவ் அர்ஜுனாவின் நாடகம் தற்போது வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. திமுகவின் பி டீம் தான் விஜய் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா தான் அந்த கருப்பு ஆடு என தற்போது தெரியவந்துள்ளது. 2026 ல் திமுக வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லும் என்பது இப்போது நடக்கும் சம்பவங்கள் உறுதிப்படுத்தி வருகிறது.