24 special

உலக மேப்பில் பாகிஸ்தான் இருக்கணுமா வேண்டாமா! உன் அப்பனே வந்தாலும் காப்பாத்த முடியாது! தேதி குறிச்சாச்சு

PMMODI,SHEHBAZSHARIF
PMMODI,SHEHBAZSHARIF

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பயன்படுத்திய அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 போர் விமானங்கள் உள்பட 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏபி சிங் ரகசியத்தை உடைத்துள்ளார். 


இந்தியாவின் துணிச்சலான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எதிர்க்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது உலகமே அறிந்த விஷயம். போர் முனையில் இந்தியாவிடம் யுத்தத்தை நிறுத்துமாறு மண்டியிட்ட பாகிஸ்தான், ஏதோ இந்தியாவுக்கு பதிலடியெல்லாம் கொடுத்தது போன்று அவ்வப்போது அப்பட்டமாகப் பொய்களை கூறி வருகிறது. அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அவ்வாறே சைகை செய்தனர். ஆனால், இந்தியாவோ ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் வெற்றிக் கொடி நாட்டியதைப் போன்றே, மூன்று போட்டிகளில் பாகிஸ்தானை பொட்டலம் கட்டி வீட்டிற்கு அனுப்பியது. 

இதற்கிடையில் அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஹின்டன் விமானப்படை தளத்தில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் விமானப்படை தலைமை ஏர் மார்ஷல் அமர்பிரித் சிங். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை இந்தியா பந்தாடிய விதத்தை விவரித்த அவர், இது பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என்று கூறினார். போர் முனையில் பாகிஸ்தானின் 10 போர் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகப் புதிய தகவல்களையும் வெளியிட்டு உலக நாடுகளுக்கு இந்தியாவின் பவரை காட்டினார். 

குறிப்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய F-16 ரக போர் விமானங்கள், சீனா வழங்கிய JF -17 ரக போர் விமானங்கள் ஆப்ரேஷன் சிந்தூரின்போது அழிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார். அதுமட்டுமின்றி கண்காணிப்பு விமானம் ஒன்று, பராமரிப்புக்காகத் தரையில் நிறுத்தி வைக்கப்பட்ட 4 முதல் 5 போர் விமானங்களும் வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் எல்லைகளில் நான்கு ரேடார்கள் மற்றும் கட்டுப்பட்டு மையங்கள் இருக்கிறது.  இதில் நான்கில் இரண்டு இடங்களில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், இரண்டு ஓடுபாதைகள், மூன்று ஹேங்கர்கள், தரையில் இருந்து ஏவுகணையை அனுப்பும் தளம் உள்ளிட்டவையும் இந்தியா தாக்கி அழித்துள்ளது.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 300 கிலோ மீட்டர் ஊடுருவிச் சென்று பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்துளார்கள். இந்திய விமானப்படை வரலாற்றில் அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்தியது சிறப்பான தருணம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.பாகிஸ்தானுக்கு இது உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளப்பட்டார்கள் என கூறினார். 

இதற்கிடையே ராஜஸ்தானின் அனூப்கர் ராணுவ முகாமில் பேசிய ஜெனரல் திவேதி பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆபரேஷன் சிந்துர் 1.0-ல் கடைப்பிடித்த நிதானத்தை அடுத்த முறை கடைப்பிடிக்க மாட்டோம். உலக வரைபடத்தில் பாகிஸ்தான் தனது இருப்பைத் தக்கவைக்க விரும்புகிறதா இல்லையா என்று யோசிக்கும் அளவுக்கு நடவடிக்கையை எடுப்போம். பாகிஸ்தான் தனது இருப்பை தக்கவைக்க விரும்பினால், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்" என்றார்.ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் விரைவில் நடக்கும் என்பதை மறைமுகமாகச் சொல்லும் வகையிலேயே அவர் இதைத் தெரிவித்தார்.

அமெரிக்கா சீனாவை வைத்து இந்தியாவை எதிர்க்கலாம் என நினைத்த பாகிஸ்தானுக்கு   அமெரிக்க F-16 ரக போர் விமானங்கள், சீனா வழங்கிய JF -17  இந்தியா போட்டு தள்ளி இருக்கோம் இனி வாலாட்டினால் உன் அப்பனே வந்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது என கடைசி வார்னிங் கொடுத்துள்ளார் இந்திய ராணுவ தளபதி.