
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில மாதமாக பாரதிய ஜனதா கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்தார். முன்னதாக தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக கட்சியை எதிர்த்து நான் ஆட்சிக்கு வருவேன் என பொதுவெளியில் பேசி வந்தார். அதிலும் கடந்த சில நாட்களாக அதிகப்படியாக பேசப்பட்டது சீமானை இரண்டு கட்சியில் இருந்தும் கூட்டணி அமைக்க பேசப்பட்டு வருவதாக அவரே கூறினார். ஆனாலும், நாடாளுமன்ற தேர்தல் என்று அனைத்து தேர்தலையும் தனித்து போட்டியிடுவதாகவும் அதிமுங்க, திமுக கட்சிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தார் முதல் ஆளாக 40 தொகுதிக்கும் வேட்பாளர் பெயரை அறிவித்தார்.
கடந்த சில வாரமாக பாஜக கட்சிக்கு எதிராக மறைமுகமாக விமர்சனம் செய்து வருகிறார். காரணமா நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை வேறு கட்சிக்கு கொடுக்கப்பட்டது பாஜகவின் சதி என்பது போல் கடுமையாக தாக்கி பேசி வந்தார். பாஜக தரப்பில் இதற்கு மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் ஒன்றை கொடுத்தார். அதாவது, தேர்தல் ஆணையம் கேட்டபொழுது இவர் எந்த பணியில் இருந்தார். கர்நாடகாவில் உள்ள தேசிய கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வழங்கியது என விக்கலாம் கொடுத்தார்.
இந்நிலையில், சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்தது. அதாவது, அரசியலில் நெருக்கமாக இருப்பவர் சத்யராஜ் திமுகவுடனும், சீமானுடன் நெருக்கத்தில் இருந்து வருகிறார். திமுக சத்யராஜை அழைத்து சீமானிடம் சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுக்காமல் இருந்ததற்கு பாஜக தான் என்றும், பாஜக செல்லும் ஓட்டை சீமானுக்கும், திமுகவுக்கும் கிடைக்கவும் சத்யராஜ் பேசியதன் காரணமாகவே சீமான் தற்போது பேசி வருகிறார் இது திமுகவுக்கு பலன் கிடைச்சதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பரிகாரமாக திமுக தலைமை சத்யராஜ் மகளுக்கு கொங்கு மண்டலத்தில் ஒரு சீட் கொடுக்கப்படுவதாகவும் அதற்கு சத்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. சீமானுக்கு தேர்தலில் கிடைக்கக்கூடிய வாக்கு என்பது எப்போதும் திராவிட கட்சிகளுக்கு எதிராகவும் அவர்களது செயல்படுகளை பொறுத்து தான் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இது சீமானின் வாக்கு சதவீதம் அதிகரிக்க உதவியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் திமுக தலைமை சத்யராஜ் மூலமா சீமானை அணுகி திமுக தனக்கு தேவையான காரியத்தை சாதிச்சதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் வரவில்லை. ஆனால், இந்த தகவல் குறித்து அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பரவலாக பேசப்படுகிறது. இது சம்பந்தமாக சீமான் அல்லது சத்யராஜ் விளக்கம கொடுப்பார்களா என்பது வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.