24 special

சிக்கப்போகும் முக்கிய தலைகள்!

ameer, jaffer sadiq
ameer, jaffer sadiq

தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் விவகாரம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான முதல் நடவடிக்கையை டெல்லி மத்திய போதை தடுப்பு பிரிவு குழு டெல்லியில் மேற்கொண்டது அதனை தொடர்ந்து டெல்லியில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தமிழகத்தை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக்கிற்கும் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனர். இதனை அடுத்து போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வும் எங்கெங்கெல்லாம் போதை பொருள் கடத்தப்படுகிறது என்பது குறித்த விசாரணைகளும் தீவிர படுத்தப்பட்டது இருப்பினும் கடந்த சில மாதங்களாகவே போதை பொருள் குறித்த நடவடிக்கைகளில் மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மறைமுகமான விசாரணையில் இருந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லியில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு குடோனில் ஆய்வு மேற்கொண்டு பல கோடி மதிப்புள்ளான போதை பொருள்கள் தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் வேதி பொருட்களை கைப்பற்றினார்.


இதனை அடுத்து தமிழகத்தின் திரை பிரபலங்கள் சிலரும் தமிழகத்தின் முக்கிய அரசியல் தமிழர்களும் இதில் சம்பந்தப்பட்ட இருப்பதாக செய்திகள் வெளியானது அதன்படியே டெல்லி போலீசார் அதற்கான விசாரணையை மேற்கொண்டனர். இதற்கிடையில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்கின்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவர் மதுரை ரயில் நிலையத்தில் அதிகாலையில் இறங்கிய பொழுது வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து மேற்கொண்ட சோதனையில் அவர் போதைப்பொருளை வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதனை அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் பிரகாஷ் என்பதும் அவர் சென்னை கொடுங்கையூர் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் என்பதையும் போலீசார் அறிந்து மேற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மேலும் இவரிடமிருந்து மட்டுமே 30 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பிரகாஷின் வீட்டிற்கு அதிகாரிகள் சோதனைகளை சென்ற பொழுது அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பிரகாஷின் மனைவி தன் வீட்டில் இருந்த போதைப்பொருள் பாக்கெட்டுகளை குப்பை தொட்டியில் வீசி உள்ளார் அவை கொடுங்கையூர் குப்பைமீட்டிற்கும் சென்றது! இருப்பினும் அதிகாரிகள் அங்கும் சோதனை மேற்கொண்டு ஆறு கிலோ போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். இப்படி மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதை பொருளும் பிரகாஷின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட மொத்த போதை பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூபாய் 180 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிநாடுகளுக்கும் இவர்கள் போதை பொருளை கடத்தியதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் அதற்குப் பிறகு சென்னையிலும் மதுரையிலும் புழக்கத்திலிருந்த போதைப் பொருட்களை கைப்பற்றினர்.

இந்த நிலையில்,. ராமேஸ்வரத்தில் 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு ஹசிஸ் என்ற போதை பொருளை கடத்த முற்பட்டுள்ளனர் என்பதையும் மேலும் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணையும் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு இந்த விவகாரம் இப்படி பாதியிலே முடிவய போவதில்லை என்றும் இந்த விவகாரத்தில் மிகப்பெரிய தலைகள் சிக்கி மிகப்பெரிய நெட்ஒர்க்கும் இதில் சிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் அமீரை சம்மன் கொடுத்து அழைத்து விசாரிக்க முடிவுசெய்யப்பட்டதாக வேறு சில தகவல்கள் கசிந்துள்ளது, அமீர் விசாரிக்க ஒத்துழைக்கவேண்டும் இல்லையேல் அவருக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் எனவும் வேறு சில தகவல்கள் கசிந்துள்ளன.,...