24 special

திமுகவுக்கு அடி மேல் அடி! டெல்லிக்கு சென்ற சர்வே ரிசல்ட்! கரூர் சம்பவம் சொல்லி அடித்த அண்ணாமலை

MKSTALIN,ANNAMALAI
MKSTALIN,ANNAMALAI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யின் கட்சிக்கு ஆதரவும் எதிர்ப்பு அலைகளும் கிளம்பியுள்ளது .  நீதிமன்ற தரப்பில் தவெகவுக்கு  எதிர்ப்பு தெரிவித்தாலும் மக்கள் மத்தியில் ஒரு அனுதாப அலை வீச தொடங்கியுள்ளது.  சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் அதிகமாக இருப்பதால்திமுகவுக்கு எதிராக தங்களின் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்கள். மேலும் அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்ற கோரிக்கைகளும் விஜய்க்கு வைத்துளார்கள். திமுகவோ இந்தமுறை உதயநிதியை  எப்படியாவது முதல்வர் பதவியில் உட்கார வைக்க போராடி வருகிறார்கள். எந்த எல்லைக்கும் செல்லவும் திமுக தயாராகி வருகிறது உதயநிதியை முதல்வராக்க.  


இதற்கிடையில் விஜய் பிரிக்கும் 13 சதவீத ஓட்டுகள் திமுகவுக்கு பின்னடைவு உருவாக்கலாம் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.  மேலும் அதிமுக பாஜக ஓட்டுக்களை  விஜய் பிரிக்கலாம் அதனால் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என நினைத்தது திமுக. அதனால் விஜயை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருந்தது. மேலும் சில உதவிகளையும் வழங்கியது. ஆனால் மக்கள் மத்தியில் அது தலைலைகீழாக மாறியது. திருமாவளவன் ஓட்டுக்களை பிரித்துள்ளார் விஜய். விஜய்க்கு கூடும் கூட்டத்தில்  ரசிகர்ளை தாண்டி விசிக, சீமான் சிறிய கட்சிகளின் தொண்டர்கள், திமுகவை சேர்ந்தவர்கள் என கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் திரை பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவு கரம் நீட்ட உதயநிதி சற்று கலங்கியுள்ளார். 

இதற்கிடையே தான் கரூர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.திமுக இந்த வழக்கில் தீவிரமாக இருக்கிறது. விஜய்க்கு கடுமையான நெருக்கடிகளை கொடுக்க திமுக முடிவு செய்துள்ளது. அரசியல் ரீதியாக நெருக்கடி இல்லாமல் சட்ட ரீதியாக விஜய்க்கு நெருக்கடி கொடுக்க திமுக திட்டமிட்டு உள்ளது.விஜய்க்கு இந்த வழக்கில் சட்ட ரீதியாக கடுமையாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. 

இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய் என்னசெய்ய போகிறார் என்ற கேள்விகள் எழுந்தது.இதனை தொடர்ந்து டெல்லிக்கு பறந்துள்ளது தமிழக வெற்றி கழக தலைகள்.  இதுஉதயநிதி தலையில் இடியை இறக்கியுள்ளது. 

2026 தேர்தலில் TVK தனித்துப் போட்டியிடும் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்த புதிய நிகழ்வுகள் அவரது வியூகங்களை மாற்றியமைக்கக்கூடும். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஜே பாண்டா அக்டோபர் 6 ஆம் தேதி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அவர் மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களை சந்திப்பார். அப்போது பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்.

முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கரூர் சம்பவம் டெல்லியில் இருந்தார். அவர் கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். இதன்பின் வரும் வாரமே கூட்டணியில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.இது திமுகவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜயை உதயநிதி நேரடியாக எதிர்க்கவில்லை. அப்படி எதிர்த்தால் வியின் ரசிகர் பட்டாளம் உதயநிதியை சமூக வலைத்தளங்களில் வச்சு செய்து விடும். கரூர் விவகாரத்தில் நீதிமன்ற கண்டங்களும் திமுகவுக்கு எதிராக தான் மாறியுள்ளது. 

மேலும் இந்த நிலையில்தான் உளவுத்துறை மூலம்  முக்கியமான சர்வே ஒன்றை நடத்தி உள்ளார்கள் . அந்த சர்வேயில் விஜய்க்கு எதிராக சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். அதன்படி  அனால் இந்த சம்பவத்தில் அரசு மேல் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அரசு மேல் விமர்சனங்களை வைக்கிறார்கள். அரசுக்கு எதிராக நிற்கிறார்கள்.  இந்த ரிப்போர்ட்டும்  டெல்லிக்கு அளித்துள்ளார் அண்ணாமலை