24 special

எம்ஜிஆர் ஆட்சியை கையில் எடுத்த திமுக!...தீடீர் பாசம் இதற்கு தானோ?

Duraimurugan, MGR
Duraimurugan, MGR

அதிமுக முன்னாள் முதலமைச்சர் எம்ஜி இராமச்சந்திரன் ஆட்சியில் இருக்கும்போது தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையாக இருந்தது இரண்டாவது தலைநகரமாக திருச்சியை மாற்ற வேண்டும் என்று நினைத்து ஆலோசனை செய்தார் அப்போது இருந்த திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து எம்ஜிஆர் கருணாநிதி இடையே வாழ்த்தி போர் தொடங்கியது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழா நேற்று திருச்சியில் கொண்டாடப்பட்டது,  நிகழ்ச்சியில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., கருதினார்.


எனக்கு அ.தி.மு.க., பிடிக்காவிட்டாலும் அந்தக் கருத்து பிடித்திருக்கிறது. இந்தியாவின் தலைநகர் ரொம்ப துாரத்தில் இருப்பதால், அவர்கள் நமக்கு அன்னியனாக தெரிகின்றனர். தலைநகர் ஹைதராபாத்தில் இருக்க வேண்டும். தமிழத்தின் தலைநகர் மத்திய பகுதியில் இருக்க வேண்டும் என்றால், திருச்சி தான் சரியான இடம். யாராவது ஒரு ஆள் வருவான். நடக்காமல் இருக்காது என்று தெரிவித்தார். முன்னதாக எம்ஜிஆர் புதிய தலைநகருக்காக 1,000 கோடி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை செய்துபோது திமுக தலைவர் கருணாநிதி இதனை எதிர்த்தார். அப்போது எம்.ஜி.ஆர் இந்த திட்டத்தில் தீவிரமாக இல்லை என்றும், அரசுக்கு எதிரான பிரச்சினைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே தலைநகரம் விஷயத்தை அவர் கையிலெடுத்துள்ளார் என்றும் கருணாநிதி கடுமையாக குற்றம்சாட்டனார். இப்போது அதிமுக ஆட்சியில் மக்களுக்குக்காக விட்ட திட்டத்தை எல்லாம் திமுக பொதுமேடை கூட்டி அங்கு நாங்கள் இந்த வசதியை செய்து தருகிறோம் என்று பேசி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. 

தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரையின் மூலமா மக்கள் பாஜக பக்கம் செல்வதால் திமுக கட்சி, அண்ணாமலைக்கு எதிராக திமுக மாநாடு, இளஞரணி விழிப்புணர்வு, போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறதாம். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழா போன்ற மேடையில் மக்களிடம் திமுக ஆட்சியின் பெருமையை அவர்கள் கட்சி நிர்வாகிகளிடமே சூளுரைப்பதாக பேசப்படுகிறது. நேற்று அமைச்சர் துரைமுருகன் திருச்சியில் பேசிய வீடியோ சமூக தளத்தில் வைரலாக எதற்காக திடிரென்று திருச்சி மீது திமுகவிற்கு திடீர் பாசம் மற்றும் காவேரி ஆற்றில் எதாவது மாஸ்டர் பிளான் போட்டு இருக்கிறீர்களா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். திமுக அமைச்சர்கள் தொடர்ந்து திருச்சியை தலைநகராக அறிவிக்க பாடுபட்டு வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மதுரையை தலையானகராக அறிவிக்க வேண்டும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.