மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் தான் கடந்த சில நாட்களாக ஊடகம் மற்றும் சமூக தளத்தில் தீயாக பரவி வந்தது. மன்சூர் அலிகான் மீது வழக்கு பாய்ந்தது உடனே அவர் மன்னிப்பு கேட்டதாக தகவல் வந்தன. இதனையெடுத்து அந்தச் விவகாரம் அப்படியே ஆஃப் ஆனது. இப்போது மீண்டும் அந்த விவகாரத்தை மன்சூர் அலிகானே ஊதி பெருசு படுத்தி உள்ளார். அக்டோபர் மாதம் வெளியான லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த திரிஷா, அந்த படத்தில் மன்சூர் அலிகான் சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் விஜயின் ப்ளேஸ் பேக் காட்சி சொல்வது போல் இவருடைய காதாபாத்திரம் இருக்கும் இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் லியோ படத்தில் திரிஷா உடன் பெட் சீன்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் என்பது போல் கூறினார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை திரிஷாவும் இவரை போன்றவர்கள் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு சிரஞ்சீவி போன்ற திரை பட்டாளங்களும் திரிஷாவுக்கு ஆதரவாகவும் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என அதன் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 2 பிரிவுகளின் கீழ் வழக்கும் தொடரப்பட்டது.
இச்சூழலில் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவுக்கு மன்னிப்பு கோரியது போன்ற தகவல் வெளியானது ஒரு வழியா இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் ”அடக்க நினைத்தால் அடங்கமறு...திரை நாயகி த்ரிஷா என்னை மரணித்து விடு என கூறினேன். தொலைபேசியில் மரணித்து விடு என்று கூறியதை எனது பிஆர்ஓ என்னை மன்னித்து விடு என தவறாக புரிந்து கொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து நானே மீள முடியவில்லை. உடனே மறுப்பு சொன்னால் அது தவறாகிவிடும். அதனால், நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டேன். என் மீது யாரெல்லாம் அவதூறு பரப்பினார்களோ அவர்கள் மீது நஷ்ட ஈடு கேட்க போறேன் என்று தெரிவித்துள்ளார்".
அதாவது மன்சூர் அலிகானை அவதூறாக பேசிய திரிஷா, மற்றும் யரெல்லாம் கண்டனம் தெரிவித்தார்களோ அவர்கள் மீது நஷ்ட ஈடு கேட்கபோவதால் திரிஷா இதனை சாதாரணமாக பார்க்காமல் மேலும் இவர் மீது எதாவது வழக்கு தொடர முனைப்பு காட்டுவார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.ஏற்கனவே இவர் குஸ்பு, மீனாவுடன் நடித்த படத்தில் அந்த சீன் இருந்தது இப்போது நடிக்கும் படத்தில் அதெல்லாம் இல்லை என்று சொன்ன மன்சூர் அலிகான் மீது மேலும் சட்ட நடவடிக்கை பாயலாம் என தெரிகிறது. மன்சூர் அலிகான் இதே போன்று செயல்களில் ஈடுபட்டு வந்தால் நடிகர் சங்க தலைவர்கள் இவருக்கு ரெட் கார்டு கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை வில்லன் பாத்திரத்தில் நடித்தவர்கள் இது போல் பேசாத நிலையில் மன்சூர் லகான் மட்டும் இப்படி பேசி சிக்கி தனது பெயருக்கு உலை வைத்துக்கொள்வதாகவும் சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.