தமிழகத்தில் ஆளும் திமுக பிரமுகர்கள் தொடங்கி அவர்களுக்கு நெருக்கமான தொழில் அதிபர்கள் என சுற்றி சுழன்று வருமான வரித்துறையும், அமலாக்க துறையும் கையில் ஆதாரங்களுடன் சோதனை நடத்தி வந்த நிலையில் திமுகவின் முக்கிய புள்ளிகள் பலர் மிரண்டு இருந்தனரே தவிர முதல்வர் ஸ்டாலின் குடும்பம் பெரிய அளவில் எந்த பயமும் இல்லாமல் இருந்தது, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே மக்கள் பார்ப்பார்கள் என ஸ்டாலின் நினைத்து இருந்தார்.இதையே உதயநிதி ஸ்டாலினும் பிரதி பழித்தார், ஆனால் மணல் குவாரி களத்தில் எப்போது வருமான வரித்துறை இறங்கியதோ அப்போது முதல் ஆட்சிக்கே ஆபத்து வருமோ என்ற நிலை உண்டாகி இருக்கிறது. தமிழக ஆளுநரை சந்தித்து பெரிய பெட்டியில் பல்வேறு தொழில் அதிபர்கள் பெரும் புள்ளிகளின் பினாமி சொத்துக்கள் என பல்வேறு ஆவணங்களை அளித்தனர்
அந்த ஆவணங்களை ஆளுநர் நேரடியாக சமீபத்தில் டெல்லி சென்ற போது முக்கிய அதிகாரிகளை சந்தித்து உண்மை நிலவரங்களை எடுத்து கூறி இருக்கிறார். இது நாள் வரை இந்தியாவில் அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் என யாரும் செய்யாத வகையில் தமிழகத்தில் மணல் குவாரிகள் மூலம் ஊழல் அரங்கேறி இருக்கும் விதத்தை ஆளுநர் விளக்கி இருக்கிறார்.அரசு அதிகாரிகளும் ஆளும் கட்சி பிரமுகர்களும் சேர்ந்து போலியாக GST வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும், போலி ரசீதை அரசு ஊழியர்களே நேரடியாக செய்து இருப்பதும் கண்டறியப்பட்டு இருப்பதாக ஆளுநர் விளக்க ஒட்டு மொத்த உயர் அதிகாரிகளும் SHOCKக்காகி இருக்கிறார்கள்.
இதை அடுத்து உடனடியாக GST வரி ஏய்ப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்ததோடு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் உள்ளே நுழைந்தது வருமான வரித்துறை, வருமான வரித்துறை RAID நடந்த நேரத்தில் பலர் குவாரிகளை மூடிவிட்டு ஓட்டம் எடுத்தனர்.இங்குதான் பெரும் ஆவணங்கள் கைப்பற்று பட்டு இருக்கிறதாம், ஆட்சியே பறி போகும் நிலைக்கு தேவையான பண மோசடி தொடங்கி அரசாங்கமே தவறு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கி இருக்கிறதாம். அமைச்சர்கள் மீதோ திமுக நிர்வாகிகள் மீதோ நடவடிக்கை எடுத்தால் அது பழி வாங்கும் நடவடிக்கை என கூறி குறைந்தபட்சம் அரசியக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் ஆனால் இப்போது நடந்து இருப்பது நாட்டில் இல்லாத புது வகையான மோசடி என்பதால் மிக பெரிய அபாயத்தில் திமுக சிக்கி இருக்கிறதாம்.
பாஜக பெரிய பெட்டியில் யார் பெயரையும் பொது வெளியில் சொல்லாமல் ஆளுரிடம் கொண்டு சென்ற மர்ம பெட்டியில் பல மோசடி நபர்களின் ஆதாரங்கள் இருப்பதன் அடிப்படையில் RAID நடப்பதால் என்ன செய்வது என தெரியாமல் ஆளும் தரப்பு விழி பிதுங்கி நிற்கிறதாம்.
தனி நபர்கள் ஊழல் வழக்கில் சிக்கினால் செந்தில் பாலாஜி போன்று சிறையில் வைத்து விட்டு ஆட்சியை தொடர்ந்து நடத்தலாம் ஆனால் ஒரு அரசாங்கமே போலியாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் ஆட்சியே கவிழும் நிலை உண்டாகும் அத்துடன் பொது மக்கள் மத்தியிலும் ஆட்சிக்கு எதிரான சூழல் உண்டாகும் என்பதால் அரசியல் ரீதியாகவும் பெரும் அடியை திமுக சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது.