24 special

அடடே "இவரல்லவா மனிதர்" காரி துப்பிய கார்ட்டூனிஸ்ட் பாலா..!

Surya Xavier and cartoon bala
Surya Xavier and cartoon bala

கதமிழர்கள் அதிகமாக குடிப்பதற்கு காரணம் அவர்களிடம் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது, இந்தி காரர்களிடம் அது இல்லை அதனால் பான் பராக்கை காரி துப்பு கிறார்கள் என ஒரு விளக்கத்தை கொடுத்து மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் முதல் வாங்கி கட்டி கொண்டு இருக்கிறார் சூர்யா சேவியர் என்ற நபர்.


சூர்யா சேவியர் என்ற நபர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் அதிகமாக குடிக்கிறார்களே?குடிப்பது தடுக்கப்பட வேண்டும். மாறுபட்ட கருத்தில்லை.தமிழகத்தில் குடிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதை வாங்குவதற்கான பொருளாதார பலம் இருக்கிறது என்பதே அதன் பொருள்.வடமாநிலங்களில் அதுவும் இல்லாததால் தான் பான்பராக் போட்டு துப்புகிறார்கள் என குறிப்பிட்டார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில் கார்ட்டூனிஸ்ட் பாலா கடுமையாக  விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் அதில், விடியல் அரசிடம் போஸ்ட்டிங் வாங்கியவர்களுக்குள், முரட்டு முட்டுக் கொடுப்பதில் யார் வல்லவர் என்பதில்  கடும் போட்டி நிலவுகிறது. 

ஆளாளுக்கு விதவிதமாக பெர்பாமென்ஸில் பின்னுகிறார்கள், இப்படி கேவலமா பெர்பாமென்ஸ் பண்ணுவதற்கு எதற்கு திராவிடன்,  சமூக ஆர்வலர், எழுத்தாளர்,கருத்து கந்தசாமி, பெரியாரிஸ்ட்டு.. மார்க்சிஸ்ட்டு, அம்பேத்கரிஸ்ட்டு.. புண்ணாக்கிஸ்ட்டுனு உலா வரணும்,

பேசாம உதயநிதி, இன்பநிதி போட்டோவை டிரான்ஸ்பரண்ட்  சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்வது நேர்மையானதாக இருக்கும், போஸ்ட்டிங் வாங்கியவர்கள் சமூக நலன் கருதி யோசிக்கவும் என குறிப்பிட்டார்.

அதாவது சூர்யா சேவியர் தனது ட்விட்டர் விவரத்தில் தன்னை சமூக ஆர்வலர், பெரியாரிஸ்ட், மாக்ஸிஸ்ட், அம்பேத்கரிஸ்ட் என குறிப்பிட்ட நிலையில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பாலா. தமிழகத்தில் பல்வேறு குடும்பங்கள் வறுமையில் நிற்க மது பானங்களே காரணம் என பல்வேறு ஆய்வுகள் கூறியுள்ளன, அப்படி இருக்கையில் தமிழக அரசின் விருதை பெற்ற ஒருவர் குடி பழக்கத்தை நியாய படுத்தும் விதமாக பேசியது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அறிவாளி சூர்யா சேவியர் என்பவருக்கு தான் முதல்வர் ஸ்டாலின் சொல்லின் செல்வர் விருது கொடுத்துள்ளேயே சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது என்ற நிலையில் சூர்யா சேவியரின் இலக்கணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.