தமிழகமும் சினிமா துறையும் பிரிக்க முடியாதது அந்த அளவில் இரண்டும் கலந்து இருக்கும், நடிகர்கள் மற்றும் குறிப்பிட்ட இயக்குனர்களின் படங்களில் அரசியல் காட்சிகள் அரசியல் வசனங்கள் கலந்து இருக்கும், தமிழ் சினிமாவில் அரசியல் பேசிய பல நடிகர்கள் உச்ச நிலைக்கு சென்றது உண்டு அதே போல் அரசியல் பேசி பல நடிகர்கள் தங்கள் சினிமா வாழ்க்கையை தொலைத்தது உண்டு.
அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ச்சியாக மத்திய அரசின் திட்டங்களை விமர்சனம் செய்து வந்துள்ளனர், நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை குறித்தும் அவரது தம்பி கார்த்தி சுற்று சூழல் சட்ட திருத்த மசோதா குறித்தும் விமர்சனம் செய்து வந்துள்ளனர், சூர்யா மனைவி ஜோதிகா ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை மருத்துவமனையுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இப்படி சூர்யா குடும்பமே தீவிர அரசியல் நிலைப்பாட்டை எடுக்க சூர்யா நடிப்பில் ஓடிடி யில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் தன்னை பெரியாரிஸ்டாக காட்டி கொண்டு இருப்பார் சூர்யா, ஜெய் பீம் திரைப்படத்தில் கம்யூனிஸ்டாக காட்டி கொண்டு இருப்பார், இப்படி படங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதியாக நடித்த சூர்யாவிற்கு கடும் பின்விளைவுகள் உண்டாகின.
சூரரை போற்று ஒரு பிராமணர் கதை அதை அப்படியே மாற்றி விட்டார் சூர்யா எனவும், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய அடையாளம் பிறகு இந்து மத அடையாளம் என மாற்றி மாற்றி வைத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார் சூர்யா. இதன் பிறகு சூர்யாவின் நடிப்பில் இரண்டு வருடங்கள் கழித்து திரைக்கு வந்த படம் எதற்கும் துணிந்தவன் திரைப்படம்.
இந்த படம் பெரும் வெற்றியடையும் என சூர்யா கணக்கிட்டு இருந்தார், சில அரசியல் கட்சிகள் ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யா பக்கம் நின்ற காரணத்தால் அவர் அவ்வாறு கணக்கிட்டு இருந்தாராம் ஆனால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நினைத்த அளவு வெற்றி பெறவில்லை.
இந்த சூழலில் சர்ச்சைக்கு பெயர் போன தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கை (பழைய 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது ) என்ற கதையை மையமாக வைத்து ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும், அவன் நீதி கேட்டு போராடுவது என்ற கதையை சூர்யாவிடம் தெரிவித்து இருக்கிறாராம் இந்த கதை ஜெய் பீம் அளவிற்கு உங்களுக்கு பெயரை பெற்று கொடுக்கும் எனவும் அந்த இயக்குனர் பேசியுள்ளார்.
இந்த கதையை கேட்ட சூர்யா ஒரு நிமிடம் வெடவெடத்து போய்விட்டாராம்.. அரசியல் பேசி நடிகர் ரஜினி போன்று சினிமாவில் உச்சம் தொடலாம் என கணக்கிட்டு இருந்தால் இவர்கள் நம்மை வடிவேல் போன்று ஆக்கிவிடுவார்கள் என அரண்டு போய்விட்டாராம் சூர்யா. தான் இப்போது சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் போன்ற பொழுதுபோக்கு திரைப்படங்கள் நடிக்கலாம் என கதை கேட்டு வருகிறேன், நாம் இது குறித்து பிறகு பேசலாம் என அந்த சர்ச்சை இயக்குனரை அனுப்பி வைத்து விட்டாராம்.
இந்த பேச்சுதான் இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது, மத்திய அரசின் சினிமா சீர்திருத்தம் குறித்த புதிய மசோதா பல நடிகர்கள் மத்தியில் மாற்றம் கொண்டுவந்துள்ளது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.