நாடாளுமன்ற கூட்ட தொடர் என்றால் முன்பு பாஜக காங்கிரஸ் கட்சியினர் இடையே நடக்கும் விவாதங்கள் பெரிய அளவில் பேசுப்பொருளாக மாறும் ஆனால் தற்போது பாஜக திமுக இடையே நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்கள் நாடு முழுவதும் ஊடகங்களில் பெரிய அளவில் விவாதமாக மாறுகிறது.இந்த நிலையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்ட தொடர் அறிவித்த அடுத்த நொடியே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம் பி கள் கூட்டம் நடைபெற்றது அதில் எப்படியும் பாஜகவினர் நம்மை மையப்படுத்தி விவாதத்தை கொண்டு செல்வார்கள் அதை முறியடிக்க வேண்டும் முடிந்த அளவு சனாதனம் குறித்து பேச்சை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.இதயடுத்து திமுக எம் பிகள் ஒரு வியூகம் வகுத்தனர் அதாவது கனிமொழி நாடாளுமன்றத்தில் பாஜகவை விமர்சனம் செய்யும் போது shame shame என கோஷம் போட வேண்டும் என்பதுதான் அந்த திட்டம், திட்டம் போட்ட படியே கனிமொழி பேசும் போது திமுக எம் பி கள் மட்டும் இல்லாமல் கூட்டணி கட்சியினரும் திமுகவுடன் சேர்ந்து கோஷம் போட்டனர் அப்போது ஒரு கட்டத்தில் கனிமொழி பெரியார் உள்ளிட்ட தலைவர்களை மேற்கோள் காட்டி பெருமையாக பேசினார்.
ஆனால் அப்போதும் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் shame shame என கோஷம் போட்டது கூடி இருந்த பாஜக எம் பி களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. என்னடா இது ஒரே ஈ அடிச்சான் காபியா இருக்கே அவர்கள் தலைவர்களை புகழும் போது கூட shame shame என கத்து கிறார்களே என தற்போது வீடியோவை பார்த்த பலரும் கிண்டல் அடிக்க தொடங்கி இருக்கின்றனர்.முதலில் இந்தி புரியாமல் இருப்பது என பேசுவது சரி ஆனால் ஆங்கிலமாவது உங்களுக்கு தெரியுமா என shame shame போட்ட திமுகவினரை தற்போது நாடு முழுவதும் கிண்டல் அடிக்க தொடங்கி இருக்கின்றனர்இதற்கே இப்படி என்றால் திமுக எம் பி கனிமொழி பேச்சிற்கு விரைவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வைத்தே பதிலடி கொடுக்க போகிறாராம் அப்போது திமுக எம் பி களின் நிலை என்ன ஆக போகிறதோ என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.