24 special

கனடாவிற்கு இந்தியா கொடுத்த அடுத்த அதிர்ச்சி...! கனடாவிற்கு மேலும் சிக்கல்...!

pm modi
pm modi

காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா கனடா இடையிலான உறவு நாளுக்கு நாள் இடைவெளி அதிகரித்து வருகின்றன.சமீபத்தில், காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு முகவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளதாக கனடா குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தால், நேச நாடுகளும் வெகுண்டு எழுவதுண்டு. ஆனால், இம்முறை கனடா தனிமைப்படுத்தப்பட்டது. அமெரிக்காவும் பிற நாடுகளும் இந்தியாவை சீனாவுக்கான வலுவான ஒரு மாற்றாக பார்ப்பதால், இந்த முறை, அந்த நாடுகளின் அதரவு இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கே இருக்கும் என்ற நிலை இருப்பதால், செயலுத்தி ரீதியாக கனடா பின்தங்கியுள்ளது.


ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியின்படி, கனடாவின் ஒட்டாவாவில் உள்ள கார்லேடன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளின் பேராசிரியை ஸ்டெபானி கார்வின், "மேற்கத்திய நாடுகள் சீனாவுடன் போட்டியிடுவதற்கு இந்தியா முக்கியம், கனடா அல்ல..." என்று கூறியுள்ளார். செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸுக்கு தொலைபேசியில் பேட்டியளித்த பேராசிரியர் ஸ்டெபானி கார்வின், "உண்மையில், இதன் காரணமாக, கனடா மற்ற மேற்கத்திய நாடுகளை விட பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது..." என்று கூறினார்.  40 மில்லியன் மக்கள்தொகை மட்டுமே உள்ள கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, ஜூன் மாதம் தனது நாட்டின் குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய முகவர்களின் சாத்தியமான தொடர்பு பற்றிய 'நம்பகமான குற்றச்சாட்டுகளை' கனடா விசாரித்து வருவதாக திங்களன்று தெரிவித்தார்.அதே நேரத்தில், ஃபைவ் ஐஸ் இன்டலிஜென்ஸ் ஷேரிங் அலையன்ஸ் போன்ற முக்கியமான கூட்டாளிகளுடனும் கனடா இந்த பிரச்சினையை விவாதித்தது.

கனடாவைத் தவிர, ஃபைவ் ஐஸ் இன்டலிஜென்ஸ் ஷேரிங் கூட்டணியில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் அடங்கும்.ஆனால் இதுவரை கனடாவுக்கு இந்த விவாதத்தின் முடிவுகள் பலனளிக்கவில்லை. இந்தியாவை பகிரங்கமாக விமர்சிக்க மறுத்த பிரிட்டன், இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று கூறியது. வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லிஸும் இந்த விவகாரத்தில் தனது அறிக்கையில் இந்தியாவின் பெயரை எடுக்கவில்லை.கனடாவை ஆதரிப்பதற்கும் இந்தியாவை எதிர்ப்பதற்கும் இடையில் பிரிட்டன் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்று லண்டனை தளமாகக் கொண்ட சாதம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் இந்திய நிபுணர் க்ஷிதிஜ் பாஜ்பாய் கூறுகிறார். பிரிட்டன் உண்மையில் இந்தியாவை ஒரு வர்த்தக பங்காளியாகவும் நட்பு நாடாகவும் சீனாவுடன் போட்டியிடக்கூடிய வல்லமை கொண்ட நாடாகவும் பார்க்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க பிரிட்டன் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. க்ஷிதிஜ் பாஜ்பாய், "இந்தியாவின் தலையீட்டிற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில், இங்கிலாந்து எந்த தரப்பும் சாராத அமைதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நினைக்கிறேன்..." என்று கூறினார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது இந்தியாவிற்கும் பிரிட்டனிற்கும் ஒரு 'பெரிய அரசியல் வெற்றியாக' இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கிடையில், கனடாவில் உள்ள பாதுகாப்பு அபாயங்கள் குறித்து இந்தியா வெளியிட்ட பயண அறிவுறுத்தலை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. கனடா உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்று என்று கூறியுள்ள கனடா அரசாங்கம், காலிஸ்தானி பிரிவினைவாத தலைவரின் கொலை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ராஜ்ஜீய மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அமைதியாக இருக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.