24 special

எச்சரிக்கை பதிவு போட்டதால் கொலை மிரட்டல்!!

subbulakshmi
subbulakshmi

மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் தான் சுப்புலட்சுமி. ஆனால் இவரை சுப்புலட்சுமி என்று சொன்னால் யாருக்கும் அதிக அளவில் தெரிய வாய்ப்பில்லை. இவர் டிக் டாக் இல்  ரவுடி பேபி சூர்யா என்ற பெயரில் கணக்கு தொடங்கி வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் பிரபலமாகி வந்தவர். ஆனால் அடிக்கடி மிகவும் ஆபாசமாக பேசியும், ஆண் பெண் இருபாலர்களையும் தரக்குறைவாக பேசுவது அதைக் குறித்து வீடியோக்கள் பதிவிடுவது போன்ற பல வேலைகளை செய்து வந்தார். இதனால் ரவுடி பேபி சூர்யா மேல் பல வழக்குகள் தொடரப்பட்டது. அப்போது கூட இவர் திருந்தவில்லை. தற்போது மீண்டும் இவரின் வேலைகளை தொடங்கியுள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சித்ரா என்னும் பெண் தன் கணவன் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். மேலும் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதோடு ‛மக்கள் பார்வை' என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசுவதாக கூறி கோவையில் அவர் புகாரளித்துள்ளார்.


மேலும் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் எனும் சிக்கா, சூசை மேரி, ஹரிகுமார் ஆகியோர் சித்ராவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுவதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி  ரவுடி பேபி சூர்யா தனது மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளாரார் என்று சித்ரா கூறுகிறார். இவ்வாறு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால் சித்ரா மிகவும் பயந்து போன நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இவர் பத்திரிகையாளர் மத்தியில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சித்ரா தான் வைத்துள்ள டிரஸ்டின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட உதவிகளை செய்து வருவதாகவும், இந்த நிலையில் சிக்கந்தரின் மனைவி என்ற பெயரில் ஒருவர் என்னை தொடர்பு தொடர்பு கொண்டார். youtube சேனலில் மூலம் உதவி கேட்டதால் சூர்யா தனது கணவரை எடுத்துக் கொண்டதாகவும், இரண்டு குழந்தைகளை வைத்து கஷ்டப்படுவதாகவும் கூறி உதவி கேட்டார். 

அதனால் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரூபாய் 174000 வரை பணம் கொடுத்து உதவினேன். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சூர்யா தன்னிடம் வந்து பிரச்சனை செய்ததால் புகார் செய்தேன் என்று கூறுகிறார். இதைத்தொடர்ந்து சூர்யா மதுரையில் கைது செய்யப்பட்டதற்கு பிறகு சிக்கந்தரின் மனைவி என்று கூறியவர் மீது சந்தேகம் இருந்ததால் அவரின் ஆதார் கார்டை வாங்கி பார்த்துள்ளார் சித்ரா. அதில் இவர் கணவரின் பெயர் என்று கூறிய பெயர் இல்லை. அதற்கு பதிலாக ஆனந்த் என்ற பெயரை இருந்தது. அதைத்தொடர்ந்து எதற்காக இப்படி ஆள் மாறாட்டம் செய்து ஏன் இவ்வளவு பணத்தை என்னிடம் இருந்து வாங்கினீர்கள் என்று கேட்டு அவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிவிட்டு தனது youtube சேனலில் அவர்களைப் பற்றி ஒரு எச்சரிக்கை பதிவு குறிப்பிட்டுள்ளார். 

இதனால் கோபம் அடைந்த அவர்கள் என்னை கொலை மிரட்டல் விட்டனர். மேலும் என்னுடைய ட்ரஸ்டில் உள்ள குழந்தைகள் புகைப்படம் என்னுடைய புகைப்படம் மற்றும் என் மகளின் புகைப்படத்தை தப்பாக எடிட் செய்து அதனை தவறான இணையதளங்களில் பதிவிடுகின்றனர். இது தொடர்பாக பல இடங்களில் புகார் கொடுக்க சென்றேன் ஆனால் அவர்கள் இப்படி தப்பான  புகைப்படம் போட்டதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் பணம் வாங்கியதற்கு வேண்டுமானால் நடவடிக்கை எடுக்கின்றோம் என்று காவல்துறையில் கூறினார்கள் என மன வருத்தத்துடன் கூறுகிறார் சித்ரா. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.