24 special

நவகிரகங்களில் புதனுக்காகவே அமைக்கப்பட்ட திருத்தலம்!!!

temple
temple

நவதிருப்பதிகளில் புதன் ஸ்தலமாக விளங்குவது இந்த அருள்மிகு பூமிபாலகர் திருக்கோவில் ஆகும். இந்த கோவிலானது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புளியங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவராக பூமி பாலகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். மேலும் உச்சவர்  காய்சினவேந்தன், தாயார் மலர் மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார்  மற்றும் புளியங்குடிவள்ளி ஆகிய தெய்வங்கள் இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பெருமாளின் மங்கல சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 83 வது திவ்ய தேசமாகவும், நவ திருப்பதிகளில் நாலாவது திருப்பதி இந்தக் கோவில் என்னும் சிறப்பை பெற்றுள்ளது. மேலும் இது நவகிரகங்களில் சிறப்பாக புதன் கிரகத்தினை வழிபடும் தளமாக விளங்குகிறது. இந்த கோவிலின் வரலாறு என்னவென்று பார்த்தால் பெருமாள் நாபியில் இருந்து தாமரைக் கொடி தனியாக கிளம்பி சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்தது என்று கூறுவார்கள். இங்கு அமைந்திருக்கும் கடவுளை பாத தரிசனம் செய்ய வேண்டும் என்றால் வெளி பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகவே அவரின் பாதத்தை தரிசனம் செய்ய முடியும்.


இந்திரனும் பிரம்மனும் ஹத்தி என்னும் தோஷம் விலக இந்த கோவிலில் வந்து வழிபட்டு சென்ற பிறகுதான் அவர்களுக்கு இருந்த தோஷம் விலகியதாம்!! வர்ண பகவான் நிருதி தர்மராஜன் நரர் ஆகியோருக்கு காட்சி கொடுத்தது இந்த தளத்தில் தான். இந்த கோவிலுக்கு அதிக அளவில் கிரக தோஷம் உள்ள மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். செவ்வாய் தோஷம்  மற்றும் சனி தோஷம் போன்ற  தோஷங்கள் அவர்களின் ராசியை ஆட்டிப்படைக்கும் பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கும் மக்களுக்கு ஒரே தீர்வாக இருப்பது இந்த கோவில்தான். குறிப்பாக புதன் கிரக தோஷம் ஏதும் இருந்தால் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வதன் மூலம் அவர்களின் தோஷங்கள் விலகி அவர்கள் வாழ்வில் மீண்டும் எந்த ஒரு கஷ்டமும் ஏற்படாமல்  இருக்கும் என்று அந்த ஊர் மக்கள் கூறுகின்றார்கள். வைணவ சேஸ்திரங்களில் நவ திருப்பதி என்று அழைக்கப்படும் நவக்கிரகங்களுடன் தொடர்புடைய கோவில்கள் மொத்தம் ஒன்பது உள்ளது. 

அதில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது போன்ற நவகிரகங்களுக்கும் தனித்தனியாக வேறு வேறு இடங்களில்  தளங்கள் அமைக்கப்பட்டு  உள்ளது. இதில் யார் யாருக்கு எந்தெந்த கிரகங்களில் சிக்கல் ஏற்படுகிறதோ அவர்கள்  அதற்கு ஏற்ற கோவிலுக்கு சென்று வழிபட்டு அவர்களின் கிரக தோஷத்தை கழித்து வருகின்றனர். அதில் இந்த அருள்மிகு பூமி பாலகர்  திருக்கோயில் சிறப்பாக புதன் கிரகத்திற்காகவே அமைக்கப்பட்ட தலமாக இருக்கிறது. எனவே இந்த கோவிலுக்கு புதனில் ஏதேனும் தோஷம் ஏற்பட்டு அவர்களின் ராசிகளை பார்க்கும் பொழுது தெரிய வந்தால் அவர்கள் அனைவரும் உடனடியாக இந்த கோவிலுக்கு வந்து இங்கு உள்ள மூலவரை தரிசித்து மேலும் பல நேத்திக் கடன்களையும் வேண்டிக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் வேண்டியது நடந்து விட்டால் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு யார் யாருக்கு எப்படிப்பட்ட கிரக தோஷங்கள் உள்ளதோ அவர்கள் அதற்கு ஏற்றார் போல் அமைந்துள்ள தலங்களை வழிபட்டு வந்தால் அவர்களின் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி இனி வாழ்வில் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ்வார்கள் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இந்த கோவில் காலை 9:00 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் திறந்திருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நீங்களும் சென்று வழிபட்டு வாருங்கள்!!!