24 special

டெல்லியில் கொடூரம்..!! 27 பேரை பலிகொண்ட தீவிபத்து !

Atrocities in Delhi
Atrocities in Delhi

டெல்லி : டெல்லி முண்ட்கா பகுதியில் நடந்த கோரா தீவிபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்றுவருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில்நிலையத்தையொட்டி அமைந்துள்ள நான்கடுக்கு வணிகவளாகத்தில் நேற்று மாலை 4.40 மணியளவில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. சுதாரிப்பதற்குள் மளமளவென தீ பரவத்தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்த வீரர்கள் அந்த நான்கடுக்கு வளாகத்தில் நுழைந்தனர்.

அவர்கள் நுழையும்போதே தீயில் சிக்கி கருகிய உடல்களை ஒவ்வொன்றாக மீட்டெடுத்து வந்தனர். முதலில் 14 உடல்களை மீட்டதாக சொன்ன காவல்துறையினர் பின்னர் 16, 17, 27 என உயர்த்திக்கொண்டே வந்தனர். பலமணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த கொடூர தீவிபத்தில் 40 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.



இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "டெல்லியில் நிகழ்ந்த தீவிபத்தில் 27 பேர் உயிரிழந்தது மனவருத்தத்தை அளித்துள்ளது.எனது எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பத்தினருடனேயே உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரணநிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும்.

காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50000மும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும் வழங்கப்படும்" என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்துறையமைச்சர் அமித்ஷா ஆகியோர் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.