புதுதில்லி : ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஏன் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் சீனாவின் சில பகுதிகள் இந்திய பேரரசிலேயே இணைந்திருந்தன. காலப்போக்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் உள்நோக்கத்தோடு பல பகுதிகள் பிரிந்தாலும் ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது. சில அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்காக ஜெகேவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.
பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமாக இடம்பெற்றது ஆர்டிக்கிள் 370ஐ நீக்குவது. தேர்தலவாக்குறுதியின்படி 370 சட்டப்பிரிவை நீக்கியது மத்திய அரசு. அதைத்தொடர்ந்து வன்முறையாளர்களால் கலவரம் ஏற்படுத்தபட்டாலும் மிக முக்கிய பிரிவினைவாதிகள் அனைவரையும் வீட்டுக்காவலில் வைத்து கலவரங்கள் ஏற்படாமல் சாதுர்யமாக தடுத்தது மத்தியபிஜேபி அரசு.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சட்டபேரவை தேர்தல் நடத்துவவது குறித்த தனது இறுதி அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த தேர்தல் மற்றும் ஆர்டிக்கிளை நீக்கியதை எதிர்த்து ஸ்ரீநகரில் வசிக்கும் ஹாஜி அப்துல் கனி கான் மற்றும் டாக்டர் அயூப் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி கிஷன் கவுல் முன்னர் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனுவில் நீங்கள் ஆர்டிக்கிள் 370 ஐயும் சவால் செய்கிறீர்களா என கேள்வியெழுப்பினார். இதற்க்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர் "நாங்கள் சவால் செய்யவில்லை.ஆனால் ஆகஸ்ட் 5 2020கிற்கு பிறகு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதியாக மாறியது" என வாதாடினார்.
உடனடியாக குறுக்கிட்ட நீதிபதி கிஷன் கவுல் " நீங்கள் கூறுவது உண்மையல்ல. நீங்கள் பேசும் வார்த்தையை கவனமாக தேர்ந்தெடுங்கள். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருபகுதியாகவே இருக்கிறது. ஒரு சிறப்பு அந்தஸ்து 370 மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சவால் செய்துள்ளீர்கள். இப்போது நாங்கள் எல்லை நிர்ணயத்தை (சட்டப்பேரவைத்தேர்தலுக்கான எல்லைகள்) நிறுத்தவில்லை.
மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகங்களிடம் இருந்து பதில் வரட்டும். அதுவரை வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த விசாரணை ஆகஸ்ட் 30 அன்று நடைபெறும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஜம்முகாஷ்மீருக்கான சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.