ஒவ்வொரு மொழி திரை உலகிலும் ஒவ்வொருவர் சூப்பர் ஸ்டார் ஆகவும் முன்னணி நடிகராகவும் வளர்ந்து இருப்பார்கள். அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராகவும் ஒரு முக்கிய ஸ்டாராகவும் வளர்ந்துள்ள நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா. இவர் ஆந்திர திரையுலகில் முதன்மையான நடிகராகவர் பாலிவுட் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சென்னையில் பிறந்த நாகார்ஜுன்னா தெலுங்கு நடிகர் அக்னி நாகேஸ்வர ராவ்வின் கடைசி மகனாவார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரியை ஹைதராபாத்தில் முடித்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி இராமா நாயுடுவின் மகளான லட்சுமி ராமாயுடுவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த மகனே நாக சைதன்யா. இருப்பினும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் விவாகரத்து பெற்றுவிட நாக சைதன்யா தந்தையிடமே வளர்ந்தார்.
பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த அமலாவை நாகார்ஜுனா காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் 2009 ஆம் ஆண்டு ஜோஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கியதாக நாகார்ஜுனா தெலுங்கு திரை உலகின் பல மாஸ் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தெலுங்கு திரை உலகில் இவர் அதிக ரசிகர்களை கொண்டிருந்தாரோ அதேபோன்று நாகார்ஜுனா தமிழில் நடிக்காமல் இருந்தாலும் தெலுங்கில் நடித்து வெளியான இவரது பெரும்பாலான படங்கள் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பார்த்தே இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். அதற்குப் பிறகு தமிழில் கார்த்தி நடித்த தோழா திரைப்படத்தின் மூலம் நாகார்ஜுனா நல்ல வரவேற்பை கண்டார். அதுமட்டுமின்றி பல மொழிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகின்ற பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நாகார்ஜுனா பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நாகார்ஜுன குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவுகிறது. அதாவது நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்ற குபேரா திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடைந்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் அடுத்தடுத்து நடைபெற உள்ளதால் அடுத்த கட்ட ஷூட்டிஙகாக நாகார்ஜுனா தனுஷ் ஆகிய இருவரும் ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்ற பொழுது விமான நிலையத்தில் இறங்கி நடந்து கொண்டு சென்றிருந்தனர்.
அப்பொழுது நாகார்ஜுனனை பார்த்த வயதான ரசிகர் ஒருவர் அவரிடம் தொட்டு பேச அருகில் வந்து நாகார்ஜுனாவின் பாதுகாவலர்கள் அந்த வயதான நபரை சிறிதும் இரக்கமின்றி தள்ளி விட்டனர். இதனால் அந்த ரசிகர் தடுமாறி கீழே விழ போய் அருகில் இருந்தவர்கள் அவரைத் தாங்கி பிடித்தனர், இந்த வீடியோவால் சமூக வலைதளம் முழுவதும் நாகார்ஜுன மற்றும் தனுஷ் இருக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த செயலின் நாகார்ஜுனாவும் தனுஷும் எந்தவித ரியாக்ஷனமின்றி நடந்து கொண்டே செல்வது பலருக்கும் கடுப்பை ஏற்றி உள்ளது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுக்கப்பட்ட நாகார்ஜுனா இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அதாவது இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அந்த வயதான ரசிகர் இடமும் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இனி வருங்காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் தான் எச்சரிக்கையாக இருப்பதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் நாகார்ஜுனா. இருப்பினும் தன் கண்முன்னே இப்படிப்பட்ட ஒரு செயல் நடந்ததற்கு தனுஷ் எந்தவித செயலையும் மேற்கொள்ளாமல் கண்டும் காணாதது போல நடந்து வந்தது தமிழ் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.