தமிழ் தெலுங்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் லட்சுமி மஞ்சு!! இவர் முக்கியமாக தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஆங்கில மொழியில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு மொழிகளிலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். என்னதான் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் கூட இன்று பழமொழிகளில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ஒரு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். மேலும் இவரின் தந்தை மோகன் பாபுவும் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகர் தான்!! இதனால் எனது நான்கு வயதில் இருந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இன்று வரையிலும் இந்திய மற்றும் அமெரிக்க திரைப்படங்களில் மொத்தம் 20 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் இவர் இதுவரை 56 திரைப்படங்களுக்கும் மேல் ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார். தமிழில் கடல், மறந்தேன் மன்னித்தேன் மற்றும் காற்றின் மொழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த மூன்று தமிழ் திரைப்படங்களிலுமே இவருடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ரோலில் அமைந்திருந்தது. ஆனால் அதன் பிறகு தமிழில் திரைப்படங்களில் நடிக்காமல் தெலுங்கு மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தற்போது 46 வயதாகும் இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்பாகவே தயாரிப்பாளராக ஆறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் ஆண்டி சீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு மகளும் உள்ளது.
திருமணமான பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கியவர் தொடர்ந்து சைடு ரோல்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவருக்கு கதாநாயகியாகவோ அல்லது கதையின் நாயகியாகவோ நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும், இவர் எதிர்பார்க்கும் அளவிற்கு கதை அமையாத காரணத்தினால் இப்படி நடித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் நல்ல திரைப்படத்திற்காக காத்திருப்பதாகவும் மும்பையில் தங்கி தற்பொழுது நல்ல கதைக்காக காத்திருக்கும் இவர் பாலிவுட்டில் சிறந்த நடிகையாக வேண்டும் என்று தற்போது நினைத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் இவரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும், தடையாகவும் இருக்கும் விஷயம் என்ன என்பது பற்றி கூறியுள்ளார்!! அவர் கூறியிருப்பது என்னவென்றால்..??தென்னிந்திய சினிமா உலகில் தனது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ஆணாதிக்கம் தான் என்று கூறி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளார்.
மேலும் தான் நடிகை ஆவதில் தனது தந்தையான மோகன் பாபுவிற்கு விருப்பமே இல்லை என்றும், தனது இரண்டு சகோதரர்களுக்கு கிடைத்த எளிமையான வாய்ப்புகள் கூட தான் மிகவும் கடினமாக போராடி ஏற்பட வேண்டிய நிலைமை இருந்து வருகிறது என்று கூறியுள்ளார். இதனால் நானும் ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவள் தான் என்று இவர் கூறி இருப்பது தற்பொழுது சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனை அறிந்து கொண்ட இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரை இருக்கும் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் ஒரு தந்தையே இவ்வாறு தனது மகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி ஆணாதிக்கத்தை காட்டியுள்ளார் என்று கேட்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது!! தற்பொழுது இந்த செய்தியை இணையங்களில் வெளியாகி படும் வைரலாக பரவி வருகிறது.