ஜார்கண்ட் : வடகிழக்கு மாநிலங்களில் நக்ஸலைட்டுகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதுடன் அவ்வப்போது பொதுமக்களையும் ராணுவ வீரர்களையும் தாக்கிவருகின்றனர். அடர்ந்த காடுகளில் அமர்ந்து அவர்கள் வாழ்வதால் அவர்களை பிடிப்பது ராணுவம் மற்றும் காவல்துறைக்கு சிரமமாகவே இருந்து வருகிறது. மேலும் நகர்ப்புற நக்சல்கள் எனும் பெயரில் சிலர் அவர்களுக்கு வெளியில் இருந்து தேவையான உதவிகளை செய்வதாக கூறப்படுகிறது.
மேலும் இரவு நேரத்தில் ராணுவம் தேடுதல்வேட்டை நடத்தவோ அல்லது இரவுநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவோ தொடர்ந்து சிரமமாக இருப்பதால் மத்திய அரசு புதிய உத்தியை கையாள இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டீஸ்கர் மாநிலத்தை போல நக்ஸல்களால் அடிக்கடி பாதிப்புக்குளாகும் மாநிலம் ஜார்கண்ட்.
இந்த இரு மாநிலங்களிலும் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் இடதுசாரி பயங்கரவாத மேலாண்மை திட்டத்திற்கு (ACALWEM) மத்திய புலனாய்வு மற்றும் மற்ற அமைப்புகளின் கீழ் புதிய தளங்கள் மற்றும் புதிய முகாம்கள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநில அரசின் சிறப்பு பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் நடத்திய சந்திப்பில் இரவுநேரத்தில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க தேவையான தளங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் இரவு நேரத்தில் இறங்கும் வசதி, மிக விரைவாக படைகளை நிலைநிறுத்தும் வசதி மற்றும் அவசர காலத்தில் வெளியேறும் வசதி ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மதிப்பாய்வு செய்ய உள்துறை அமைச்சகம் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் நீதிபதிகளுடன் இரண்டுமுறை கலந்தாலோசித்துள்ளதாக மேலும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே முதல்வர் ஹிமந்த் சோரன் கடந்த வருடம் செய்தியாளர்களிடம் நான்கு இடங்களில் மட்டுமே நக்சல்கள் உள்ளனர் என கூறியிருந்தார்.
பரஸ்நாத் பஹார், புதா பஹார், பிஹார் எல்லை மற்றும் முச்சந்தி என்ற நான்கு இடங்களில் மட்டுமே மோசமான தீவிரவாதிகள் நடமாட்டம் இருக்கிறது என்று கூறிய நிலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நக்சல்களின் ஆதிக்கம் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் அதிகாரபூர்வ தகவலின்படி 2016ல் மட்டும் 196 நக்சல் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.2020ல் 126 ஆக குறைந்துள்ள நிலையில் 2020ல் பொதுமக்கள் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதும் அதுவே 2016ல் பொதுமக்கள் 61 பெரும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.