24 special

பாழடைந்த சுவர்...! மசூதி குறித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

Supreme. Court
Supreme. Court

ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் சுரங்கம் அமைக்க ஜிண்டால் நிறுவனத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் போட்டிருந்தது. அதை எதிர்த்து மசூதி நிர்வாகம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


மேல்முறையீடாக நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அணுகியது அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. ராஜஸ்தான் மாநிலம் புர் கிராமத்தில் உள்ள திரங்கா மலையில் சுரங்கம் தோண்ட ஜிண்டால் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அஞ்சுமன் கமிட்டி ஜிண்டால் நிறுவனத்தை பணிசெய்யவிடாமல் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் அஞ்சுமன் கமிட்டி தரப்பில் திரங்கா மசூதியில் உள்ள கலந்தாரி பகுதியில் சுவர் மற்றும் தொழுகை மேடை உள்ளது. அதை இடிக்க அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றத்தில் மனு அழைக்கப்பட்டது. ஜிண்டால் தரப்பில் சுரங்கம் தோண்டவுள்ள பகுதியில் காணப்படும் சுவர் போன்ற அமைப்பு மசூதியா இல்லையா என கண்டறிய ஒரு குழு அமைக்க கோரியிருந்தது. 

2021ல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜிண்டால் சா நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து கமிட்டி உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹிந் குப்தா மற்றும் வி.சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில் " தொழுகை அல்லது நமாஸ் நடத்தும் நோக்கத்திற்காக இடிந்து விழப்போகும் பாழடைந்த சுவரை மசூதியாகவோ அல்லது புனித ஸ்தலம் என்ற அந்தஸ்தோ வழங்கமுடியாது.

ஏனென்றால் இந்த கட்டிடம் மசூதியாக பயன்படுத்தப்பட்டதாக  எந்த காலகட்டத்திலும் எவ்வித ஆதாரமும் இல்லை. பயன்பாட்டிற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாதநிலையில் ஒரு பாழடைந்த சுவர் அல்லது ஒரு மேடையை நமாஸ் பண்ணும் நோக்கத்திற்கான ஒரு மத வழிபாட்டுத்தலமாக அங்கீகரிக்கவோ அந்தஸ்து வழங்கவோ முடியாது.

கட்டிடம் கூரையின்றி செடிகள் வளர்ந்துள்ளது. தொழுகை நடத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" என நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 2010 முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜிண்டால் சா அதிகாரிகள் தெரிவித்தனர்.