24 special

சீனாவுடன் நேருக்குநேர் மோதல்..! மத்திய அமைச்சர் வெளியிட்ட ரகசியம்..!

rajnath sigh and china xi jinping
rajnath sigh and china xi jinping

புதுதில்லி : கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் கிழக்கு லடாக் பகுதிகளில் இந்திய சீன ராணுவம் கைகலப்பில் ஈடுபட்டிருந்தது. இந்திய வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். ஆனால் சீன ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டதாக சீன பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.


இந்நிலையில் எல்லைக்கோட்டு பகுதியில் நடந்ததை கூறினால் ஒவ்வொரு இந்தியனின் மனதும் பெருமிதம் கொள்ளும் என மத்திய பாதுகாப்பாத்துரை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். அவர் கூறியதாவது " இந்திய சீன மோதல் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் நமது ராணுவம் தனது முழு தைரியத்தையும் வெளிப்படுத்தியது.

மிக நுணுக்கமாக செயல்பட்டது. இதுகுறித்த தகவலை முழுமையாக நான் கூறினால் இந்திய மக்களின் மனது பெருமிதம் கொள்ளும். வீரர்கள் என்ன செய்தார்கள். நாங்கள் என்னமாதிரியான முடிவுகளை எடுத்தோம் என வெளிப்படையாக கூறமுடியாது" என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது சீனாவுக்கு மீண்டும் விடப்பட்ட எச்சரிக்கை என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த ஏப்ரல் முதல்வாரத்தில் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை செய்தியை அனுப்பியிருந்தார். "இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் எங்கள் ராணுவம் யாரையும் விட்டுவைக்காது. இந்தியா சும்மாவிடாது என்ற செய்தி சீனாவுக்கு சென்றுள்ளது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும்" என கூறியிருந்தார். மேலும் 2020 மே 5ல் பாங்காங் ஏரி மற்றும் சில பகுதிகளில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து,

இந்தியா மற்றும் சீனத்துருப்புகளுக்கிடையே கலவரம் வெடித்தது. ஜூன் 15ல் கல்வானில் ஏற்பட்ட மோதலில் சீனப்படைகள் கிழக்கு லடாக்கில் அத்துமீற முயன்றன. ஆனால் இந்திய ராணுவம் துரிதமாக செயல்பட்டு அதை முறியடித்ததுடன் பெரும் வன்முறையும் நிகழ்ந்தது. இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில் சீனத்தரப்பில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.