24 special

" ஒரு நொடி தாமதம் கூடாது" பிரதமர் உள்துறை அமைச்சரை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது எழுத்தாளர் பாய்ச்சல் !

Aadhinam,  stallin and modi
Aadhinam, stallin and modi

தருமை ஆதினம் பட்டினம் பிரவேசம் நிகழ்ச்சிக்கு முதல்வர் அனுமதி கொடுத்துவிட்டார் என வெளியான செய்தி பல இந்து சமய மக்களை இருவகைகளில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, இந்து சமய விவகாரங்களில் தலையிடும் உரிமை முதல்வருக்கு யார் கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.


இது குறித்து எழுத்தாளர் சுந்தர் ராஜ சோழன் கருத்து தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு : முதலமைச்சர் அனுமதியால் பட்டினப்பிரவேசம் நிகழ்கிறது என்பது ஆதீனத்தை இழிவு செய்யும் பதம் அதே போல இந்த ஒரு வருடத்திற்கே அனுமதி,கலந்து பேசி வருகிற காலங்களில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பேசுவது மேலும் மேலும் சிக்கலையே உண்டு செய்கிறது.

எதிர்காலங்களில் சமயத்தை காக்க தெளிவான கூட்டறிக்கைகளை ஆதீனங்கள் வெளியிடவில்லை என்றால், இந்த பண்பாடு சீர்குலைக்கப்படும் என்பது தெளிவானது விரைவில் பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து,தமிழகத்தில் சமயப் பாதுகாப்பிற்காக செய்ய வேண்டியவை என்ன என்று கோரிக்கை வைக்கும் நேரம் வந்துவிட்டது.,

சமயப் பெரியோர்கள் தாமதிக்காதீர்கள் எனவும் சுந்தர் ராஜ சோழன்  வேண்டுகோள் விடுத்துள்ளார், தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை அழைத்து நிகழ்ச்சி நடத்தியதற்காக தருமை ஆதீனத்தை பழிவாங்கும் விதமாக முதலில் கோட்டச்சியர் மூலம் தடை உத்தரவு பிறப்பித்து பின்பு போராட்டங்கள் எதிர்ப்புகள் அதிகமான சூழலில் இப்போது அனுமதி என அரசு இந்துக்கள் மத நம்பிக்கை விவகாரங்களில் விளையாடுவதாக மேலும் கொந்தளித்து வருகின்றனர்.

நீதிமன்றம் சென்றால் விரைவில் பல்வேறு விவகாரங்களில் மூக்கு உடைபட்டு தமிழக அரசு திரும்பும் என்பதே ஆதினம் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் அனைவரது கருத்தாக உள்ளது.