மயிலம் ஆதீனம் அவர்களே!! மதுரைஆதினம், ஜீயர் போன்றவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசாமல் தவிர்த்திருக்கலாம் என்று அறிவுரை சொல்கிறீர்களே ஜீயர் கூறியகருத்து
குறித்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் தவிர்த்து சென்று இருக்கலாமே,ஏன் தானாக வந்து கருத்து கண்ணாயிரம் போல சேகர்பாபு கண்ணசைவில் அதை நீங்கள் பேசுவது ஆச்சரியத்தின் உச்சம்!!ஆளுங்கட்சிக்கு ஆதரவா?
ஆதீனங்கள் சென்று ஸ்டாலினை கையெடுத்து கும்பிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது?இதனால் தான் சுபவீரபாண்டியன் போன்ற திராவிடம் பேசும் தமிழ் கேடர்கள் கிண்டல் செய்கிறார்கள்.
சிவனை வணங்குங்கள் வேறு எவரையும் வணங்க வேண்டாம் என்ற உயர்ந்த திமிர் பக்தி ஏன் உங்களிடம் இல்லை?சமய நிகழ்ச்சிகளில் அரசியல் கலக்க வேண்டாம் என்று சொல்லும் உங்களிடம் கேட்கிறேன். ஆட்சியாளர்கள் பிரித்தாளும் அரசியல் பேசும்போது திருமடங்களுக்கு ஆதரவாக நாங்கள் பேசும் போது திமுக அரசுக்கு தோழமை முட்டுதல் போல சிலர் செயல்படுவது சைவத்திற்கு செய்யும் அநீதி!!
சிவனடியார்கள் பக்தர்கள் ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசம் பல்லக்கு தூக்க முயற்சிக்கிறோம்.சிலர் சுயநல எண்ணத்துடன் அரசுக்கு ஆதரவாக பல்லக்கு தூக்க முயற்சிக்கிறார்கள். இதனால்தான் தமிழகத்தின் மூலவரும் உற்சவரும் ஸ்டாலின் என்று சேகர்பாபு சொல்கிறார்.
என்ன பிரவேசம் நடக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார்,பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை,பாமக அன்புமணி ராமதாஸின் ஆதரவு நிலை,
தமாக.தலைவர் ஜிகே வாசன் அறிக்கை ,மற்றும் ஆதரவாக அறிக்கை வெளியிட்ட களத்தில் போராடிய உண்மை சிவ தொண்டர்களுக்கும் சைவநெறி காவலர்களுக்கும் நன்றி பாராட்டல் , ஆசீர்வாதம் செய்யாமல் தொந்தரவு கொடுத்த அரசுக்கு வாழ்த்து கூறுவது என்ன மரபு என்றே தெரியவில்லை?
சிவபெருமானை விமர்சனம் செய்து வீடியோக்கள் வெளியிடும் நபர்களை கைது செய்யவும் சிவசிந்தனை புரியும் அரசியல் அயோக்கியர்களையும் எதிர்த்து நீதிமன்றங்களில் போராடாமல்,
வீதி மன்றங்களில் போராடாமல் போராடாமல், எந்தவிதமான கருத்துக்களும் கூறாமல் இருந்தால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் எதிர்காலங்களில் இந்த மடங்கள் உங்கள் கைகளில் இருக்காது.அனைத்தையும் அம்பலவாணக் கடவுள்பார்த்துக்கொண்டே இருக்கிறான் என குறிப்பிட்டுள்ளார் இராம.ரவிகுமார்.