தமிழகத்தை உலுக்கிய ஆடு திருட்டு வழக்கில் நடந்த சம்பவங்கள் குறித்து திருச்சி காவல்துறையினரிடம் கேட்டு அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அதன் பிறகு நேரடியாக "கொலை செய்யப்பட்ட" சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திர பாபு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் 6 குண்டுகள் மற்றும் துப்பாக்கி எடுத்து செல்லவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் சுட தயங்க வேண்டாம் எனவும் உத்தரவு கொடுத்து இருப்பதாக தெரிவித்தார் மேலும் கொலை செய்தது கைது செய்யப்பட்ட மூவரும்தான் என உறுதியாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து சைலேந்திர பாபு அளித்த முழுமையான பேட்டி பின்வருமாறு :- ரோந்து பணியில் செல்வார்கள் கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்ல அறிவித்துள்ளோம். உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.
சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கும் பல முயற்சிகள் முயற்சிகளை செய்து கொண்டு இருக்கிறோம், 1856 ஆண்டிலிருந்து காவல்துறை மீது தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம்.இறந்த பூமிநாதன் உயிர்த்தியாகம் செய்து காவலர் கடமையை காப்பாற்றியுள்ளார். மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த 52 சிறார் கிளப்புகள் ஆரம்பிப்பதற்கு திட்டம் இருக்கிறது. குற்றவாளி மணிகண்டன் மது அருந்தி இருந்துள்ளான்.
இந்த கொலைக் குற்றத்தில் மூன்று பேர்தான் ஈடுபட்டுள்ளார்கள் என்பது காவல்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கொலை குற்றத்தில் ஆதாரத்தின் அடிப்படையில் புலன் விசாரணை முழுமையாக காவலர்களுடன் விசாரித்து விட்டேன், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை இவர்கள்தான் கொலை செய்துள்ளனர் எனவும்,
100% ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று தெரிவித்தார் டிஜிபி. டிஜிபி சந்தேகத்திற்கு இடமில்லை என்று தெரிவித்த போதும் பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரத்தில் சந்தேகமே நீடித்து வருகிறது மேலும் முழுமையான விசாரணை நடத்த இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.