
நம் முன்னோர்கள் வாழ்வியல் முறைகளில் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று பிரித்து பிற்காலத்தில் வருபவர்களுக்கு கூறி சென்று உள்ளனர். அது சில பழக்க வழக்கங்கள் இன்றும் கூட நடைமுறையில் இருந்து வருகிறது. சாதாரண சின்ன விஷயமாக இருந்தாலும் கூட அதை ஏன் செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள் என்று உற்று நோக்கி பார்க்கும் பொழுது தான் அதில் உள்ள உண்மை என்னவென்று நமக்கு புரிய வரும். அது சில உண்மைகளும், மருத்துவம் சார்ந்த சில விஷயங்களும் மறைந்து இருப்பதை உணர முடியும். உதாரணமாக பெண்கள் கால் மீது கால் போட்டு உட்காரக் கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு கூறுவார்கள். நாம் அதை சாதாரணமாக உட்காருவது என்று நினைப்போம்.
ஆனால் அவற்றின் உண்மை தன்மை என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று நமக்கு தெரிய வரும். உண்மையாகவே பெண்கள் கால் மீது கால் போட்டு உட்காருவதால் அவர்களின் கர்ப்பப்பையில் தன்மை மிகவும் குறுகியதாக மாறிவிடுகிறது. இதனால் கர்ப்ப காலத்தில் அவர்கள் குழந்தை பிறக்கும் நேரத்தில் மிகவும் அதிகமான வலியையும் பல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவேதான் நம் முன்னோர்கள் பெண்களை கால் மீது கால் போட்டு உட்காரக் கூடாது என்று சொல்லி உள்ளனர். இது போல பல விஷயங்களில் நாம் செய்யும் விளக்க விளக்கங்களில் சில பழக்கங்கள் தவறு என்று கூறுவது உண்மையில் பல காரணங்களை உள்ளடக்கியதாக இருந்து வருகிறது.அவற்றை ஒன்றாக நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் தவறானது என்றும் அவற்றை வீட்டிற்குள் உட்கார்ந்து விட்டவோ கடிக்கவோ கூடாது என்றும் கூறுவார்கள். அதன் உண்மை காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா???
சாதாரணமாகவே நம் நகத்தில் மிகவும் அதிகமான அழுக்குகள் நிறைந்து இருக்கும். இவ்வாறு அந்த அழுக்குகள் நிறைந்த நகத்தினை கடிப்பதால் அந்த நகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நம் வாய் வழியாக வயிற்றுக்குள் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அவ்வாறு வயிற்றுக்குள் செல்லும் அந்த அழுக்குகளில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருக்கும். எனவே வயிற்றுக்குள் செல்லும் அந்த பாக்டீரியாக்கள் நம் வயிற்றில் இதமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நகத்தின் சிறு துண்டுகள் கூட வயிற்றுக்குள் சென்று விட்டால் அதை குடல் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும் அபாயமும் இருந்து வருகிறது. மேலும் வீட்டிற்குள் இருந்து நகங்களை கடிக்கவோ வெட்டவோ செய்தால் அதில் உள்ள சிறு துண்டுகள் வீட்டில் வைத்திருக்கும் உணவுப்பொருட்களில் விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
வரும் நகம் விழுந்த உணவினை தெரியாமல் நாமோ அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்களோ எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்களுக்கும் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.எனவே நகம் படிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அடிக்கடி தங்களின் நகத்தினை சுத்தமாக வெட்டிவிட்டு அதன் மீது வேப்ப எண்ணெய் போன்றவற்றை தேய்த்துக் கொண்டால் நாம் கடிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில் தற்போது நகத்தில் உள்ள அழுக்கினை மைக்ரோஸ்கோப் இல் வைத்து அதன் மூலம் அதில் உள்ள பாக்டீரியாக்களை நமக்கு காட்டும் விதமாக ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தும் நம் உடலுக்கு பலவிதமான நோய்களை தரும் என்று கூறுகின்றனர். மேலும் அந்த வீடியோவில் உள்ள பாக்டீரியாக்களை பார்க்கும் பொழுது இனி நகம் கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் கூட மறந்தும் கூட நகத்தினை வாயில் வைக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.