24 special

வெளியூர் பயணத்திற்கு அடிக்கடி செல்பவர்களா??? அப்போ இந்தப் பொருள் கண்டிப்பா கையில வச்சுக்கோங்க!!!

travel
travel

இன்று உள்ள உலகத்தில் அதிக அளவில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டே தான் இருக்கிறது. பெரிய இயந்திரங்கள் முதல் சின்ன சின்ன வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் வரை எல்லாவற்றிலும் தற்போது புதிய வகையான கண்டுபிடிப்புகள் வந்த வண்ணமே இருந்து வருகிறது. பொருட்களை வைத்துக் கொள்ளும் பைகளை மடக்கினால் அது சிறிய ஹேண்ட் பேக் போல மாறிவிடுகிறது. மேலும் அவற்றில் உள்ள சிறிய சிறிய ஜிப்புகளை திறக்கும் பொழுது அவை துணிகளை எடுத்துச் செல்வதற்கு ஒரு பெரிய டிராவலிங் பேக் ஆகவும் மாறிவிடுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது காய்கறி நறுக்குவதற்கு என்று ஒரு பொருளும் வந்துவிட்டது. அவற்றில் காய்கறிகளை போட்டால் அதுவே நமக்கு ஏற்ற அளவில் நறுக்கி தந்து விடுகிறது. இது வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதால் தற்போது எல்லா பெண்களும் இந்த காய் நறுக்கும் பொருளினை வாங்க வேண்டும் என்று  ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.


இதைத்தொடர்ந்து பல  பொருள்கள்  புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு அதை விற்பனையும்  செய்து வருகின்றனர். மேலும் இது போன்ற புதிய வகையில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் ஆனது  அனைவரின் கண்களையும் கவரக்கூடிய வகையிலும் அமைந்திருப்பதால் கல் அதிக அளவில் இதுபோன்ற பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும் இவை வேலை சுமையை குறைத்து எளிதில் அனைத்து வேலைகளையும் சுலபமாகி கொடுப்பதால் நேரம் வீணாகாமல் எளிதில் வேலைகள் முடிந்து விடுகிறது. மேலும் இதனை வேறு எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் கூட அவற்றை ஈசியாக கழட்டி மாட்டும் விதத்திலும் இவை உருவாக்கப்பட்டு இருக்கின்றது. எனவே வேண்டிய இடத்திற்கு நம்மால் கொண்டு செல்லவும் முடிகிறது. இதுபோலவே தற்போது  மற்றும் ஒரு பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அது என்ன பொருள் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பொதுவாக வெளியூர் பயணத்திற்கு செல்பவர்கள் அவர்களின் துணிகள் மற்றும் ஒரு சில பொருள்களை எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல்  குளித்ததற்கு பின் துவட்டுவதற்கு என்று துண்டு ஒன்றையும் எடுத்துச் செல்வார்கள். ஏற்கனவே துணிகள் மற்றும் முக்கியமான பொருள்களை எடுத்து வைப்பதற்கு அவர்களின் பேக் புல் ஆகி விடும். இந்த நிலையில் தொண்டினை வேற எடுத்து வைப்பது இன்னும் கொஞ்சம் இடத்தை அடைத்து விடுவதைப் போல இருக்கும். இந்த நிலையை சரி செய்வதற்கு என்று தற்போது ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால்!!!!ஒரு சிறிய பாக்கெட்டில்  பிஸ்கட் அளவிற்கு வெள்ளை நிறத்தில் உருண்டை ஒன்று உள்ளது. அந்த பாக்கெட்டை பிரித்து உள்ளிருக்கும் அந்த வெள்ளை நிறத்தில் உள்ள உருண்டையை மட்டும் ஒரு தண்ணீர் உள்ள கப்பில் போடுகின்றனர்.

சிறிது நேரத்திலேயே அந்த வெள்ளை இருந்த உருண்டை பிரிந்து  நீளமான துண்டாக மாறுகிறது. அதன் பிறகு அதனை கையில் எடுத்து நாம் துவட்டிக் கொள்ளும் வகையில் உள்ளது. இது போன்ற சிறிய பொருள்களை நாம் எடுத்து செல்வதற்கு அதிக அளவில் இடம் தேவை கிடையாது. சட்டை பாக்கெட்டை போதுமானதாக இருப்பதால் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தற்போது இந்த பொருள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்தப் பொருளை எப்படி  பயன்படுத்த வேண்டும் என்றும்  அந்த வீடியோவில் ஒருவர் செய்து காட்டுகிறார். தற்போது இந்த பொருளை வாங்குவதற்கு அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.