24 special

பில்லி, சூனியம் போன்றவற்றால் உங்களுக்கு அவதியா... இந்த அம்மன் கோவில் பத்தி கேட்டாலே போதும்....

SOTTANI PAGAVATHY AMMAN
SOTTANI PAGAVATHY AMMAN

இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களில் இயற்கை சூழல் மிகவும் அழகாக அமைந்திருக்கும் மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் என்னும் மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த கோவில் தான் இந்த ஜோட்டானி பகவதி அம்மன் கோயில்!!! எந்த ஊரில் இருந்து வந்தாலும் எர்ணாகுளத்தின் ரயில்வே நிலையத்தை அடைந்து அங்கிருந்து ஆட்டோ அல்லது உள்ளூர் பேருந்து போன்றவற்றின் மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம். இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் அம்மனை இந்த கோவிலின் பெயருடன் சேர்ந்து சோட்டானிக்கரை அம்மன் என்று அனைவரும் அழைத்து வருகின்றனர். இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் அம்மன் காலையில் சரஸ்வதி ஆகவும், மாலையில் மகாலட்சுமியாகவும் மற்றும் இரவில் துர்க்கையாகவும் தினந்தோறும் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இவ்வாறு ஒரே கடவுள் மூன்று அவதாரங்களாக காட்சியை கொடுப்பது மிகவும் வித்தியாசமான ஒன்றாக அமைந்திருக்கிறது.


இந்த கோவிலில்  சிறப்பாக பேய் ஓட்டுவது மற்றும் பில்லை சூனியம் போன்றவற்றை அகற்றுவது போன்ற அனைத்தையும் கீழ்காவு பகவதி அம்மன் கோவிலில் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரலாறு என்னவென்று பார்த்தால் இங்குதான் பெருந்தேவிகளான சரஸ்வதி மகாலட்சுமி மற்றும் துர்க்கை போன்றவர்கள் ஜோதி வடிவத்தில் காட்சி அளித்ததாகவும் அதனால் இந்த ஊரின் பெயர் ஜோதி எண்ணப்பரை என்று அழைக்கப்பட்டதாகவும் அதன் பிறகு அது அப்படியே மாறி தற்பொழுது சோட்டானிக்கரை அம்மன் அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். இங்கு அமைந்திருக்கும் பகவதி அம்மன் திருமாலுடன் சேர்ந்து காட்சியளிப்பதால் அம்மே நாராயணா என்று பக்தர்கள் கூறி வழிபட்டு வருகின்றனர். இங்கு ஏதேனும்  மன கோளாறினால் பாதிப்பு இருந்தாலும் அல்லது உறவினர்கள் யாரேனும் தீங்கு நினைத்து செய்வினை ஏதாவது வைத்து இருந்து அதனால் அவதிப்பட்டு வருபவர்களும் இந்த கோவிலுக்கு வந்து பகவதி அம்மனை வழிபட்டு குணமும் அடைந்து வருகின்றனர். மேலும் இங்கு வந்து வேண்டுதல்கள் வைத்து அது நிறைவேறியவுடன் அந்த பக்தர்கள் மீண்டும் மற்றவர்களுக்கு வந்து அம்மனுக்கு நேற்றிக் கடன் செலுத்தி செல்கின்றனர்.

இந்த கோவிலின் விழாக்களில் ஒன்றான குருதி பூஜை தினமும் இரவு 8 மணி முதல் 9:00 மணிக்குள் நடைபெற்று வருகிறது. இது சோட்டானிக்கரை கோவிலின் கீழ்காவில் நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக அதிக அளவில் மக்கள் ஆர்வத்துடன் வந்து அம்மனை வழிபட்டு பகவதியின் அருளை பெற்று செல்கின்றனர். ஆண்டுதோறும் இந்தக் கோவிலில் மிகவும் சிறப்பாக மகம்தொழல் என்ற பெயரில் மாசிமகம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் நவராத்திரி விழா சித்திரை விசு போன்ற திருவிழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் திருவிழாக்களில் ஒன்றாக இருந்து வருகிறது.மற்ற கோவில்களில் அபிஷேகம் செய்யும் பொழுது அங்கு அபிஷேகம் செய்த தண்ணீர் நாம் எடுத்துக் கொண்டு தீர்த்தம் என நினைத்து தலைகளில் தெளித்துக் கொள்வோம். ஆனா இந்த கோவிலில் அது போன்று அபிஷேகம் செய்யும் தண்ணீர் பக்தர்களுக்கு வெளியில் கிடைக்கவே செய்யாதே என்றும், அபிஷேகம் செய்யும் தண்ணீர் முழுக்க அங்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குருதி குலத்திற்கு சென்றடையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கீழ்க்காவு பகவதி அம்மன் கோவிலில் அமைந்திருக்கும் மரத்தில் பெரிய பெரிய பொம்மைகள் மற்றும் ஆணிகள் போன்றவை அடிக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். அதான் ஆணிகளில் எல்லாம் ஒவ்வொரு வகையான தீய சக்திகளை கட்டி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இது போன்று பில்லி சூனியம் பேய் ஓட்டுவது போன்ற பூஜைகள் அனைத்துமே இரவு எட்டு மணிக்கு மேல் நடைபெற்ற வருகிறது. இத்தகைய அதிசயமும் மர்மமும் நிறைந்த கோவிலுக்கு தற்போதுபக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..