
அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது. 11 மாத சிறைவாசம் முடிந்த நிலையில், மே 16-ம் தேதி நடந்த விசாரணையின்போது, பாலாஜியின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி ரொம்பவே கெஞ்சி ஜாமீன் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அமலாக்கத் துறை, ‘எங்கள் தரப்பு வழக்கறிஞர் வேறொரு முக்கியமான வழக்கு விசாரணையில் இருப்பதால், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராக முடியவில்லை. எனவே, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையைக் கோடை விடுமுறைக்குப் பிறகு, ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது, ஓராண்டுச் சிறைத் தண்டனையை முழுமையாக நிறைவு செய்த பிறகே பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்.”
“அதற்கு முந்தைய நாள்மே 15-ம் தேதி நடந்த விசாரணையின் போதும் இதேதான் நடந்திருக்கிறது. அப்போது, ‘செந்தில் பாலாஜியின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே செல்கிறது. எனவே, இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என அவரது வழக்கறிஞர்கள் கேட்க, அதை அமலாக்கத்துறை கடுமையாக ஆட்சேபித்திருக் கிறது. கடைசியில் நீதிமன்றமும், ‘பல வழக்குகளில் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஜாமீன் கிடைக்காமலேயே இருந்திருக்கிறது. பல வழக்குகள் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப் படாமல் இருக்கின்றன. இடைக்கால ஜாமீன் மீதெல்லாம் உடனடியாக முடிவெடுக்க முடியாது’ எனச் சொல்லிவிட்டது. ‘நடப்பதையெல்லாம் பார்க்கும்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் அண்ணனுக்கு விடிவுகாலம் பிறக்கும்போல’ என அவருடைய ஆதரவாளர்களே புலம்பத் தொடங்கி விட்டார்கள்.”ஆனால் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.கவிற்கு சாதகமாகவே உள்ளது. மோடி தான் மீண்டும் பிரதமராவர் என கருத்துக்கணிப்புகளும் கூறிவருவதால் இன்னும் சோகத்தில் உள்ளாராம் செந்தில் பாலாஜி.
இது போதாது என்று கரூர் மற்றும் கோவை மாவட்ட தி.மு.க-வில் குழப்பங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. மேலும் இதுதான் சமயம் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என கழக சீனியர்கள் கட்டம் கட்டி கொண்டு வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.கோவை, கரூர் மாவட்டங்களுக்கு செந்தில் பாலாஜிதான் பொறுப்பு என்பதில் உறுதியாக இருந்தது திமுக . அந்த நிலைமை இனியும் நீடித்தால், கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்க்க முடியாது.அதுமட்டுமல்ல, செந்தில் பாலாஜியின் ஆசியுடன் பதவிகள், பொறுப்புகளை வாங்கிய அவருடைய ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிவருகிறார்கள் என சீனியர்கள் தலைமையிடம் புகார்கள் பறந்துள்ளதாம். இந்த செய்தி செந்தில்பாலாஜி காதுக்கும் சென்றுள்ளதால் மிகவும் அப்செட்டில் உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் செந்தில் பாலாஜியிடம் என்னதான் விசாரத்தாலும் அப்ரூவர் ஆகலாமே தவிர ஆதாரங்கள் இல்லையாம்.மேலும் ஆதரங்கள் அனைத்தும் அவரது தம்பி அசோக்கிடம் தான் உள்ளதாம். அதனால் திமுகவும் செந்தில் பாலாஜியை கழட்டிவிட ரெடிஆகிவிட்டதாம். அப்பருவர் ஆனாலும் வரும் வழக்கை சந்தித்து கொள்ளலாம். மேலும் செந்தில் பாலாஜி தம்பியை மட்டும் சிக்க வைத்துவிட கூடாது என தெள்ள தெளிவாக இருக்கிறார்கள். செந்தில்பாலாஜியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்க தொடங்கிவிட்டது