கோவையில், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி முடிந்த உடன், அந்நிகழ்வில் பங்கேற்ற திமுக பிரமுகர் ஒருவர் நடுரோட்டில் கதறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு சென்று இருக்கிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு திமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முதல்வரின் வருகைக்காக பாதுகாப்பு கருதி நான்காயிரம் காவலர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ. 441.76 கோடி மதிப்பிலான உதவிகளை 23 ஆயிரத்து 534 பயனர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்பட்டது. இதற்கிடையில் முதல்வர் வ உ சி மைதானத்திற்கு சென்றடையும் போது அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கும் வகையில் கோவை அவிநாசி சாலையில் திமுக தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
அதிமுக கோட்டை கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை முழுவதும் அதிமுக வசம் சென்று விட்டது. இதன் காரணமாக கோவையில் முதல்வர் பங்கேற்கும் போது திமுக தரப்பில் இருந்து தொண்டர்கள் அதிக அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக மேலும் பல மாவட்டங்களில் இருந்து தனியார் கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகள் மூலமாக தொண்டர்களை கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இப்படி ஒரு நிலையில் நேற்று திமுக பிரமுகரான, கோவை மதுக்கரை கிளை துணை செயலாளர் நடராஜை கோவையிலேயே தி.மு.கவினர் விட்டுச் சென்றுவிட்டனர். இதனால், ஆத்திரத்தில் சக உடன்பிறப்புகளை போனில் தொடர்புகொண்டு கடுமையாக திட்டி கோபத்தை தீர்த்துள்ளார்.
அதாவது, நடராஜை மதுரையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து, விழா முடிந்தவுடன் அவரை மட்டும் தனியாக விட்டுவிட்டு மற்றவர்கள் வீடு திரும்பி இருக்கின்றனர். இதனால் கோபமடைந்த அவர் விழா முடிந்தவுடன் மதுரை செல்வதற்காக பயணிகள் நிழற்குடை அருகே வெயிலில் நின்றவாறு கடுங்கோபத்துடன் சக உடன்பிறப்புகளை கடும் வார்த்தைகளால் கழுவி கழுவி ஊற்றுகிறார். அப்போது, செல்போனில் "என்னடா கட்சி நடத்துறீங்க? உங்களுக்கு தேவைப்பட்டால் கூப்பிடுவது... வேலை முடிஞ்சு போச்சுன்னா கழட்டி விட்டு ஓடிப் போவது தான் உங்க புத்தியா என கத்தி கத்தி பேசி புலம்புகிறார். அதுவும் குறிப்பாக பாத்ரூம் சென்று விட்டு வருகிறேன் என அத்தனை முறை சொல்லிவிட்டு சென்றும் கூட, வேண்டுமென்றே தன்னை இவ்வாறு விட்டு சென்றது ஏன் என கொதித்து எழுகிறார். அப்போது அங்கிருந்த ஒருவர், அவர் பேசும் போது எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதனால், என்னடா இது ? மதுரையில் இருந்து கோவைக்கு சென்று அசிங்கப்பட வேண்டியதா போச்சே என உடன்பிறப்புகள் உள்ளுக்குள் பேசி குமுறுகின்றனராம்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.