
நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய் கட்சி கடந்த மாதம் கட்சியை அறிவித்தார். அதன் பின் தற்போது கட்சியில் உறுப்பினர்களாக இணைய புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதற்கு திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார். இதில் ரஜினியையும் சேர்த்துள்ளதால் இருவரும் ஒன்றிணைந்து கடுமையாக வசைப்பாடி வருகின்றனர்.
சென்னையில் நேற்று முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் எ ராசேந்திர சோழனின் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் படத் திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஜய் மற்றும் ரஜினியை தாக்கி பேசியுள்ளார். அதாவது, தமிழகத்தின் மிகப் பெரிய கதாநாயகன், நேற்றுதான் ஒரு கட்சியை ஆரம்பித்தார். அதற்காக உறுப்பினர் சேர்க்கையை ஆன்லைனில் தொடங்கினார். அப்போது உறுப்பினர் சேர்க்கைக்கு பலரும் முந்தியதால் கூகுளே ஸ்தம்பித்துவிட்டது என சொன்னார்கள். அவருடைய கட்சிக்கு 20 லட்சம் உறுப்பினர்கள் என்கிறார்கள். அடுத்த நாளே ஒரு சேனலில் 50 லட்சம் உறுப்பினர்கள் வந்துவிட்டார்கள் என்கிறார்கள்.
தமிழ் சமுதாயத்திற்காக நாங்கள் எல்லாம் ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கிட்டு, அதில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு டீ, பிஸ்கட், ரொட்டி கிடைத்தால் உண்பது, இல்லாவிட்டால் பட்டினி கிடந்து இந்த மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்கிற எண்ணற்ற என் தியாகிகளை இந்த இளைஞர் சமுதாயம் தூக்கி எறிந்துவிட்டது. கூத்தாடிகளை தூக்கி வைத்து கொண்டாடும் இந்த நிலை உடைபட வேண்டும். அதற்க்கு மீண்டும் கலியுக பெருமாள் உருவாக வேண்டும். நான் இப்போது பேசிவிட்டு வெளியே சென்றால் விஜய் ரசிகர்கள் 100 பேர் கல்லால் அடித்தல் கூட கேட்பதற்க்கு ஆள் இல்லை. அவர்களுக்கு யார் தியாகு, யார் பாவா, அவர்களுடைய சிந்தனை என்ன, எழுத்து என்ன , சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன உள்ளிட்ட எதை குறித்தும் விஜய் ரசிகர்களுக்கு கவலை இல்லை.
ஒரு காலத்தில் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்றார்கள் அப்படிபட்ட சூப்பர் ஸ்டாரின் பாபா பட பெட்டிகள் எல்லாம் எனது காட்டிற்குள் தான் கிடந்தது. அப்படி தான் ரஜிகாந்த்தையும் எதிர்த்து அரசியலில் நீடித்து வருகிறேன் என்றார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து ஒரு பக்கம் சினிமாவிலும் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தாலும் தற்போது முழு வீச்சில் அரசியல் பணிகளை செய்து வருகிறார். அப்படி தான் இரண்டு கோடி உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியில் செய்து வரும் விஜயை தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியுள்ளார்.
முன்னதாக விஜய் கட்சி தொடங்கியதும் விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என்று அளிக்கப்படும் அதேபோல் முன்னதாக கட்சி தொடங்கிய வேல்முருகனின் கட்சியின் பெயரும் ஆங்கிலத்தில் TVK என்றழைக்கப்படும் இதனால் ஆரம்பத்திலேயே விஜயை எதிர்த்து வந்தவர் வேல்முருகன். விஜய் உறுப்பினர்களுக்கான செயலியை அறிமுகப்படுத்தியதும் ஏராளமான ரசிகர்கள் இணைய முன்வந்ததால் அந்த செயலி அணைத்து தளத்திலும் முடங்கியது. தற்போது வரை இரண்டு நாட்களில் 50 லட்ச உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேல்முருகனின் இந்த பேச்சு இணையத்தில் உலா வர விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் வேல்முருகனை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.