
தமிழகத்தில் பொதி பொருள் விவகாரமானது எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆணி தரமான ஒரு சம்பவத்தை திமுக எதிர்க்கட்சிகளின் கைகளில் கொடுத்துள்ளது. போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவின் அயலக பிரிவை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் தலைமறைவானதும் அதியக், பாஜக கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். தற்போது அதையே தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முன் வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
ஜாபர் சாதிக் கடந்த வாரம் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரி மூலம் கைதானார். முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில, இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தனது இனைய பக்கத்தில் திமுக கட்சிக்கு சவுக்கடி பதிலை கொடுத்துள்ளார்.
அதாவது, புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 110 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த திறமையற்ற திமுக ஆட்சியில் போதை பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது. அதிமுக ஆட்சியில் தனக்கு தும்மல் வந்தாலும் நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தானாக பதவி விலக வேண்டும். ஏன் இன்னும் பொறுப்பில் இருக்கிறீர்?
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூகப் பொறுப்பாளர்கள் பலர், தற்போது திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டில் பையுமுதல் செய்யப்படும் போதை பொருட்கள் எல்லாம் மத்திய அமைப்புகளால் தான் செய்யப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறை தூக்கத்தில் இருந்து கொண்டு முதல்வர் போல செயல்படாமல் விரைந்து விழித்து கொண்டு துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சமூக பொறுப்பாளர்கள் என்பது கடந்த அதிமுக ஆட்சியில் சிறு பிரச்சனை என்றாலும் சினிமா துறையில் இருக்கும் நட்சத்திரங்கள் முதல் ஆளாக குரல் கொடுப்பார்கள். தற்போது திமுக ஆட்சியில் நடக்கும் அவலத்தை ஏன் செவி சாய்க்காமல் பதுங்கி இருக்கிறார்கள் என்ற கேள்வியை தான் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பியுள்ளார் என்று அரசியல் விமர்சகளால் கூறப்படுகிறது. அதிமுக சார்பில் போதை பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதனை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வதாக கூறப்படுகிறது.
திமுகவின் முன்னாள் உறுப்பினரான ஜாபர் சாதிக் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். அவர் அதன் மூலம் சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்ததாக போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் தெரிவித்திருந்தார். இதனை ஜாபர் சாதிக் கைது செய்தவுடன் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதற்கட்ட விசாரணையாக அவர் இந்த தகவலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.