24 special

அந்த கதையே வேண்டாம்..ஒன்னும் நடக்காது பன்னீர் செல்வத்திற்கு ஜெய்குமார் பதில்!

OPS, Jayakumar
OPS, Jayakumar

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக கட்சி எடப்பாடி பழனிச்சாமி மற்றும்  பன்னீர் செல்வம் அங்கம் வகித்து வந்தனர். அப்போது, கட்சியில் ஒற்றை தலைமை ஏற்பட்டு பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இதனால் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பை வெளியேற்றி அறிவித்தார். ஆனாலும், பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக கொடி, லெட்டர்பேட் ஆகியவை பயன்படுத்தி வந்தனர். இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டு இடைக்கால தடை கொடுப்பட்டு உத்தரவிட்டது இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பன்னீர் செல்வத்திற்கு தடாலடியாக பதில் கொடுத்துள்ளார்.


அதிமுக கொடி மற்றும் லெட்டர் பேடை பயன்படுத்த தடை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஓ பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதிமுக கொடி மற்றும் கட்சியின் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் உறுதி செய்து இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக கூறினார். அவர் கூறியதாவது:- தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தார்கள். இதில், இரு நீதிபதிகள் அடங்கிய குழு இன்றைக்கு, அதிமுக கொடியையோ, லட்டர் பேடையோ, சின்னம், வேட்டியில் உள்ள அதிமுக கொடியின் கலர் என எதையும் பயன்படுத்த கூடாது என தடை விதித்துள்ளது.

இது வரவேற்க தகுந்த நல்ல தீர்ப்பு என்று அதிமுக தொண்டர்கள் பார்க்கின்றனர். ஏன் என்றால், ஓ பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை கழகத்திற்கு நம்பிக்கை துரோகி. உண்ட வீட்டுக்கே இரண்டம் செய்கிற நம்பிக்கை செய்த துரோகி என்றால் அது ஓ பன்னீர் செல்வம் தான். எம்ஜிஆர் மாளிகையை திருக்கோவில் போன்று மனதில் வைத்து நாங்கள் பூஜித்து பார்த்து வருகிறோம். அந்த திருக்கோயிலில் அடியாட்களுடன், குண்டர்களுடன் உள்ளே புகுந்து டாக்குமெண்ட்களை எடுத்தது மட்டுமல்லாமல் ஜெயலலிதா அறையை உடைத்து எல்லாவற்றையும் கொள்ளையடித்து கொண்டு காரில் சென்ற உங்கள் எல்லாருக்கும் தெரியும். இப்படிப்பட்டவர்களுக்கு வந்து ஒரு தண்டனையை நீதிமன்றம் கொடுத்துள்ளது. அதிமுக தொண்டர்கள் எல்லாம் கொதித்து கொண்டிருந்த நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

குழப்பம்.. குழுப்பம்.. குழப்பத்திற்கு மேல் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நீதிமன்ற நடவடிக்கையில் ஓ பன்னீர் செல்வம் இறங்கியிருக்கிறார். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைக்கும் ஓ பன்னீர் செல்வத்தால் நடக்காத ஒன்று. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒற்றுமை உணர்வோடு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து ஜெயகுமாரிடம் எடப்பாடி தரப்பு தன்னிடம் ஒன்றிணைந்து செயல்பட பேசி வருவதாக கூறுகிறார் என்ற கேள்விக்கு : மெக்டானல்ஸ் கோல்ட் 17 எம்எம் வந்துச்சு.. ஆனா அதற்கு பிறகு 70 எம்எம் இன்னும் வரலை. அதனால் இத மாதிரி ஒரு ரீல் சுத்துற கதை.. ரீல் கட்டுற கதை.. நல்லா கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க.. இது எல்லாம் நடக்காது. என நகைச்சுவையாக பேசியுள்ளார். 

தொடர்ந்து அதிமுகவில் இருந்து வெளியில் வந்த பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி வந்த வண்ணம் உள்ளன. அதிமுக கட்சி மற்றும் தொண்டர்கள் அதிகப்படியாக எடப்பாடி பழனிச்சாமி பக்கமே உள்ளனர். இதனால் பன்னீர் செல்வத்திற்கு இந்த தீர்ப்பு வரும் என்பது தெரிந்த ஒன்றை என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.