24 special

ஆபாசத்தால் நாறும் திராவிட மாடல் பேச்சு... ஸ்டாலினின் தூக்கம் போச்சு... ஓவர் நைட்டில் ஒடுங்கிப்போன திமுக!


திமுகவில் ஆபாச பேச்சு என்பது தவிர்க்க முடியாதது. பெண்களை பற்றி ஆபாசமாக பேசி நாகரீகம் அற்ற அரசியலை திமுக தடுக்கவில்லை எனில் பொதுமேடைகளில் பதிலுக்கு பதிலாக


காது கூசும் ஆபாச பேச்சுக்களை திமுக கேட்க வேண்டிய நிர்பந்தந்தம் ஏற்படும். பெண்களை பொதுமேடையில் ஆபாசமாக இழிவுபடுத்துவதில் என்றும் முன்வரிசையில் இருக்கிறது திமுக.

திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை ஆர் .கே.நகரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் சைதை சாதிக் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பதிவில், ‘ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்களுடைய வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகின்றது.

ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்.இதுபோன்ற ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இது தான் புதிய திராவிடமா?’ என கேள்வி எழுப்பி இருந்தார். இதில் கனிமொழியையும் குஷ்பு டேக் செய்து இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில் ‘ஒரு பெண்ணாகவும்,மனிதனாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும், இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவே முடியாது. திமுக பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக்கோர முடியும்’ என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதற்கு கனிமொழிக்கு நடிகை குஷ்பூ நன்றி கூறியுள்ளார்.‘மிக்க நன்றி கனி. உங்களது நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்’’ என குஷ்பு டிவிட்டரில் நன்றி தெரிவித்து இருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்புக்கிளம்பவே, ஆபாசமாக பேசிய சைதை சாதிக் ட்விட்டர் பக்கத்தில், ‘’வணக்கம். நான் மேடையில் பேசிய பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இருப்பினும் மரியாதைக்குரிய நடிகை குஷ்பு அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நன்றி!’’ என மன்னிப்பு கேட்டுள்ளார். 

திமுகவினர் ஆபாசமாக பேசுவதும் பின்னர் பின்வாங்குவதும் கலைஞர் காலம் தொட்டே வாடிக்கையாவிட்ட நிலையில், ஆபாச இதுகுறித்து அதிருப்தியில் இருக்கும் திமுகவின் சீனியர் ஒருவர் பேசுகையில், ‘’தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பொதுவாக ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும் பேசக் கூடியவர்கள். அந்த வகையில், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இருந்தார்.

அதேபோல, தி.மு.க.இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி கிண்டல் செய்யும் விதமாக அருவருக்கதக்க வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். ’’எடப்பாடி விட்டிருந்தால் சசிகலாவின் காலுக்குள்ளேயே புகுந்திருப்பார் என ஆபாசமாக பேசினார் உதயநிதி ஸ்டாலின். ஜெயலலிதா அம்மா என்றால், மோடி அப்பா என்றால் என்ன உறவுமுறை என திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் பிரச்சாட்ரத்தில் பேசியது எல்லாம் அறுவறுப்பின் உச்சம்.

சீனியர் அமைச்சர் துரைமுகருகன், ‘’கவலைப்படாதீங்க.உங்கம்மாளுக்கும் 1000, பொண்ணுக்கும் 1000. அம்மாளுக்கும், மகளுக்கும் 2000 ஆயிரம் கொடுக்கும் ஆட்சி இந்த ஆட்சி தான்’’ என டபுள் மீனிங்கில் பேசியதெல்லாம் ஆணவம். இது ஒருபுறம் இருக்க, அப்பாவி பெண்களை பியூட்டி பார்லர் சென்று தாக்குவது, தன்னிடம் தவறாக நடந்து கொண்ட தி.மு.க. உறுப்பினர் பற்றி மேலிடத்தில் புகார் தெரிவித்தால், அப்பெண்னை கட்சியை விட்டே நீக்குவது.

பாதிக்கப்பட்ட பெண் நீதி வேண்டி போராடுவது போன்ற சம்பவங்கள் தி.மு.க.வில் வாடிக்கையாகி வருகிறது.குஷ்பு எந்த கொள்கையை வேண்டுமானாலும் ஏற்று அரசியல் செய்யட்டும். ஆனால் குஷ்பூவை இவ்வளவு கீழ்தரமாக விமர்சனம் செய்வது வண்மையான கண்டனத்திற்குரியது. பொதுவெளியில் பயணிக்கும் பெண்களை இப்படி ஆபாசமாக பேசுவதுதான் திராவிட மாடலா..? இப்படியெல்லாம் பேசி தான் திமுக வ வளர்க்க வேண்டுமா? 

சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேச மேடை போடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன்.ஆனால், அந்த எண்ணம் தவறோ என்று எண்ண தோன்றுகின்றது. மானமுள்ள பெண்கள் திமுக மேடை ஏற இனி தயங்குவார்கள். இன்று குஷ்பு, நாளை, அது இன்று மேடை ஏறிய யாரவதாகவும் இருக்கலாம்.வெற்றிகொண்டான்களையும், தீப்பொறி ஆறுமுகத்தையும் ஆபாச பேச்சிற்கென்றே பயிற்சி கொடுத்து களத்தில் இறக்கிய கட்சி தானே திமுக. 

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிப் மு.க.ஸ்டாலின், ‘’வெவ்வேறு பக்கங்களில் இருந்து வரக்கூடிய பல்முனை தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். ஒரு பக்கம் திமுக தலைவர், ஒரு பக்கம் முதல்வர், இத்தகை சுழலில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் உறுப்பினர்களோ, மூத்த நிர்வாகிகளோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் என்ன சொல்வது?, எந்த பொறுப்பாக இருந்தாலும் அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து தான் அந்த பொறுப்பு நிலைத்து நிற்கும் என்பதை கவனமாக வைத்து கொள்ளுங்கள் .

நாள்தோறும் நம்மவர்கள் யாரும் பிரச்சனையை உருவாக்கியிருக்க கூடாது என்று தான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்குகிறது. என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள் மிக மிக முக்கியமானவை, ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; இதனால் அடுத்தவர்களிடம் பேசும் போது மிக மிக எச்சரிகையாக பேசுங்கள்’ என கேட்டுக்கொண்டார் ஸ்டாலின். ஆனால், அவர் பேசியப் பேச்சுக்களை திமுக நிர்வாகிகள் மதிக்கவே இல்லை. மாறாக இன்னும் அவர்களின் ஆபாச, அடாவட்ரி பேச்சு வரம்பை மீறியே செல்கிறது.

திமுகவின் மூத்த சிர்வாகியாகவும், கட்சியின் விசுவாசியாகவும்  சொல்கிறேன், ஸ்டாலின் சர்வாதியாக மாறி நடவடிக்கை எடுக்காவிட்டால் அழிவு திமுகவை அழிக்க யாரும் தேவையில்லை. கழக உடன்பிறப்புகளே குழி தோண்டி புதைத்து விடுவார்கள். பாஜக பெண் தலைவர்கள் பற்றிய கீழ்த்தரமான சைதை சாதிக் பேச்சுக்கு கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது.

அது கனிமொழியின் மனப்பக்குவத்தை காட்டுகிறது. சைதை சாதிக்கை கட்சியிலிருந்து நீக்குவதன் மூலம் முதல்வர் ஸ்டானின் தனது மனப்பக்குவத்தை நிரூபிக்கலாம்’’என வேதனை பொங்க கூறுகிறார் அந்த சீனியர் உடன்பிறப்பு.