கோவை மாவட்டம் அன்னூரில் அர்ஜுன் சம்பத் பேசுகையில் இரு நாட்களுக்கு முன்பு திமுக மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர்ந்திருந்த சோனியா, பிரியங்காவிடம் காவிரி பிரச்சினை குறித்து கூறியிருக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு நேரடியாக அழுத்தம் அளித்திருந்தால் காவிரி நீரை நிச்சயம் பெற்றிருக்க முடியும். ஆனால் முதல்வர் ஸ்டாலின் நிர்புந்தம் செய்யவில்லை. நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்பது குறித்து பேசியதும், ஆ.ராசாவும் சனாதன மாநாட்டில் பேசியதும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றது பல சர்ச்சையை நாட்டு மக்களிடம் ஏற்படுத்தியது.
இண்டியா கூட்டணியில் இருக்க கூடிய தலைவர்கள் உதயநிதிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மாநாட்டை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக கோவையில் பேசிய அவர், காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசுக்கு எதிர்க்க தீர்மானம் கொண்டு வராமல், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். காவிரி விவகாரத்தில் விவாசயிகள் அனைவரின் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு விவசாயிகள் பற்றி துளியும் பிரச்சனை இல்லை. கூட்டணியில் பிளவு ஏற்படக்கூடாது என்று தான் எண்ணுகிறார்கள்.
தொடர்ந்து ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார்.அவருடைய தாய் துர்கா ஸ்டாலினோ சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவை தொடங்கி வைக்கிறார். முன்னாள் முதல்வர் எடப்படி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியை விடுதலை செய்ய வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால் பயங்கரவாதி இமாம் அலியை என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தியது யார்? ஜெயலலிதா தலைமையிலான அரசுதானே! அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் அவர்கள் இந்து மக்களுக்கு ஆதரவு தந்தவர். ஆனால், இன்னைக்கு அதிமுகவின் கொள்கைக்கு மாறாக எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்துகிறார்.
அவர் நிர்வகித்த அதிமுக இப்போது முஸ்லீம்களை தாஜா செய்கிறது. வரும் 29ஆம் தேதி சென்னிமலையில் ஜெபக் கூடம் அமைக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சி சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும். தமிழகத்தில் இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். திமுக , காங்கிரஸ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறு வருவதாக கூறினார். ஜெகத்ரட்சகன், ஆ. ராசா சொத்துகளை தற்போது அமலாக்கத்துறை முடக்கியதுபோல் உதயநிதி சொத்துக்களையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.