Cinema

நாளை வெளியாகுமா லியோ...தொடரும் சர்ச்சை!

actor vijay
actor vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி பல மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் இந்த படத்தை வெளியிட காலை 9மணி முதல் நள்ளிரவு 1.0 மணிக்குள் முடித்து கொள்ள தினசரி 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்கப்பட்டது.இருப்பினும் ரசிகர் காட்சிகளுக்கு அனுமதி வேண்டும் என்று செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பாளர் லலித் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் 4மணி காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து 7 மணி காட்சிகளுக்கு அனுமதி வேண்டும் என்றால் தமிழக அரசிடம் கோரிக்கை எழுப்புங்கள் என்றனர். தொடர்ந்து படம் வெளியாக ஒரு நாளே உள்ள நிலையில் படக்குழுவினர் உள்துறை செயலாளர் அமுதாவிடம் மனு அளித்தனர். இந்நிலையில் ஐதராபாத் நீதிமன்றத்தில் சீதா ராமா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நாக வம்சி என்பவர் லியோ படத்தின் பெயரை 'லியோ' என்பதை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் 'லியோ' படத்தின் தெலுங்கு பதிப்பை வரும் 20-ஆம் தேதி வரை திரையிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கனவே தமிழ்நாட்டில் ரசிகர்கள் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சோகத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது தெலுங்கானாவில் படம் வெளியிட தடை செய்யப்பட்டதை தெலுங்கானா ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தெலுங்கானாவில் லியோ படத்தை விநியோகிக்க  தில் ராஜு மறுப்பு தெரிவித்திருந்தார். இப்போது படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதால். தமிழ்நாடு மட்டுமின்றி இப்போது தெலுங்கானாவில் படத்திற்கு பிரச்சனை எழுந்துள்ளது. படம் வெளியாக இன்று ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இன்றைய நாள் முடிவில் தான் தெரியவரும் நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாளை 7மணி காட்சிகள் வெளியிட தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடம் மேலும் கோபத்தை அதிகரித்துள்ளது. தற்போது வரை காலை மணி காட்சியே முதல் காட்சி மற்றும் ரசிகர்கள்  காட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.