24 special

துரை தயாநிதி விவகாரத்தில் வெளியான திடீர் ரிப்போர்ட்!!.... மருத்துவமனை சொன்ன அந்த தகவல்.... பின்னணி என்ன!

savukku shankar
savukku shankar

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சகோதரர் அழகிரியின் மகன் துரை தயாநிதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திடீர் மயக்கம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக கிரீன் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு தயாநிதியின் மூளையில் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பரபரப்பான செய்திகள் வெளியானது இதனை அடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் அவரை நேரடியாக மருத்துவமனையில் சென்று சந்தித்து வந்தார். மேலும் துறை தயாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது, இதனைத் தொடர்ந்து மூன்று மாத காலம் அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த துறை தயாநிதி கடந்த மார்ச் மாதத்தில் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் மூன்று மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்ற துரை தயாநிதிக்கு இன்னும் உடல்நலம் தேறியதாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 


இந்த நிலையில் துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து சிஎம்சி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது துரை தயாநிதி சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான யோசனையில் இருந்ததாகவும், அவனை நானே தேர்தலில் போட்டியிடும்படி கூறினேன் என்றும் சவுக்கு சங்கர் கைதாவதற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அவனிடம் தேர்தலில் போட்டியிடு என்று கூறிவிட்டு பத்து நாட்கள் கூட ஆகவில்லை போதை பழக்கத்தால் போதை தலைக்கு ஏறி கீழே விழுந்து தலையில் பலத்த அடி ஏற்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திமுகவின் இந்த ரகசிய போதை கடத்தல் விவகாரம் அவர்களது சொந்த உறவினர் ஒருவரின் உயிருக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது. இருப்பினும் இந்த திமுக மற்றும் அறிவாலய தலைமை இந்த போதை கடத்தலை எப்படி செய்கிறார்கள்? எப்படி அவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் பணம் மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று தயாநிதியின் இந்த போதை பழக்கத்திற்கே தமிழகத்தில் வியாபித்துள்ள போதைப் பொருள்களின் நடமாட்டம் தான் அதுவும் ஆளும் அரசின் முக்கிய செயல்பாடுகள் தான் காரணம் என்று நேரடியாகவே திமுக அரசை சாடியிருந்தார். 

இதைத்தவிர இன்னும் பல தகவல்கள் சமூக வலைதளம் மட்டுமின்றி அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் துறை தயாநிதியின் சிகிச்சை நல்லபடியாக நடந்து வருவதாகவும் அவரது உடல் நிலையில் தேற்றம் இருப்பதாகவும் அவரது உடல் நலம் குறித்து எந்த ஒரு தகவலையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று வேலூர் சிஎம்சி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக தயாநிதியின் உடல்நிலை குறித்து முதல்வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை துறை தயாநிதி உடல்நிலை குறித்த எந்த ஒரு தகவலையும் அப்டேட்டையும் மருத்துவமனை தரப்பு வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் தொடர்ச்சியாக தமிழகத்தில் போதை பொருள், கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் மது போன்ற விவகாரங்களில் அதிக உயிரிழப்புகள் மற்றும் வெட்டுக்கொலைகள் நடந்து வருகிறது. இது திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதால் துரை தயாநிதியின் விவகாரத்திலாவது அரசியல் வட்டாரங்களில் உள்ள பேச்சை வதந்தியாக மாற்ற வேண்டும் என நினைத்து அறிவாலய தலைமை மருத்துவமனை சார்பில் இந்த திடீர் அறிக்கையை வெளியிட வைத்திருக்கலாம் என்று கிசு கிசுக்கப்படுகிறது.மேலும் ஏற்கனவே அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் போதையால் துரை தயாநிதி காயம்பட்டு சிகிச்சையில் இருக்கிறார் என கூறியது வேறு தற்போது மீண்டும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....