இங்கிலாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிசம் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. மேலும் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பில் இருந்து வந்த ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இதனால் இங்கிலாந்தில் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பிரதமராக அமர்த்தப்பட்டுள்ளார் என்பது இந்தியா முழுவதும் பெருமளவில் பெருமைக்குரிய விஷயமாகவே பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தியாவில் நடக்கின்ற பல முக்கிய பண்டிகைகள் இங்கிலாந்திலும் மிகவும் கோளாகாலமாகவே நடைபெற்றது. அந்த பண்டிகைகள் அனைத்திலும் ரிஷி சூனத் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டும் இன்றி இந்திய விழாக்களின் பொழுது இந்திய மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான உறவானது ஒரு நல்ல சுமூகமான முறையிலே இருந்து வந்தது தொழில் ரீதியாகவும் படிப்பதற்கு பல இளைஞர்கள் அங்கு சென்றதிலும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்ல உறவு நீடித்து வந்தது.
ஆனால் இந்திய பிரதமரையே எதிர்த்து வந்த இண்டி கூட்டணியில் கூட்டணி அமைத்திருக்கும் திமுக ரிஷி சுனக் கூட ஒரு சங்கீ தான் என வழக்கம் போல தங்களது விமர்சன கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தனர். இருப்பினும் அவை எதையும் பொருட்படுத்தாமல் தன் நம்பிக்கையில் இருந்து பின் வாங்காமலும் செயல்பட்டால் ரிஷி சுனக். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் பொது தேர்தலில் ரிஷி தோல்வியை தழுவினார். அதாவது 14 ஆண்டுகளாக தனது ஆட்சியை கைப்பற்றி வந்த கன்சர்வேட்டிசம் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை தழுவி தொழிலாளர் கட்சி வரலாற்று வெற்றியை பெற்றது. மேலும் பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றார். இதனால் ஒட்டு மொத்த உலகத்தின் பார்வையும் ஸ்டார்மர் மீது திரும்பி உள்ளது. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது, மேலும் நவீன அரசியல்வாதியாகவும் பார்க்கப்படுகின்ற ஸ்டார்மர் மத்திய வலதுசாரியாகவும் வலம் வருகிறார்.
அதுமட்டுமின்றி தனது பிரச்சாரத்தின் பொழுது சேவையை முதன்மை பணியாக எடுத்துக் கூறியது, மட்டுமின்றி நாட்டிற்கே முதலிடம் கட்சி தான் இரண்டாவது இடம் என்று தனது உழைப்பை நாட்டிற்காக செலுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.இது மட்டும் இன்றி, யார் இந்த ஸ்டார்மர் என்று பார்க்கும் பொழுது, 2008 முதல் 2013 வரை ஒரு வழக்கறிஞராக பணியாற்றிய ஸ்டார்மர் பெரும்பாலும் இடது லண்டன் வழக்கறிஞர் என்று கிண்டல் செய்யப்பட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் எப்படி இந்து மதத்தின் மீது உள்ள நம்பிக்கையை ஒரு பிரபலமும் அரசியல் பிரமுகர் வெளிப்படுத்தினால் அவர்களை வலதுசாரிகள் என்று விமர்சனம் செய்கிறார்களோ அதே போன்று அங்கும் நிகழ்ந்துள்ளது. அதில் தான் ஸ்டார்மரும் கிண்டல் செய்யப்பட்டுள்ளார். அதாவது இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கும் தற்போது பிரதமராக பொறுப்பேற்கப்பட்டுள்ள ஸ்டார்மரும் வலதுசாரி நம்பிக்கை கொண்டவர்கள்.
அதுமட்டுமின்றி ரிஷி சுனக்கை போன்று ஸ்டார்மரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகி மீண்டும் இந்திய பெருமையை இந்திய வம்சாவளி ஒருவர் பிரிட்டனில் நிலைநாட்டி உள்ளார் என இணையதளங்களில் பதிவுகள் இடப்படுகிறது. மேலும் பிரதமராக பதவியேற்ற ஸ்டார்மர் பிரிட்டனில் உள்ள இந்து கோவிலிற்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்படுகிறது மேலும் இதற்கு திமுகவினர் வழக்கம் போல் தங்களது விமர்சனங்களை முன்வைக்க அதற்கு வலதுசாரி தரப்பினர் தங்கள் பதிலடிகளை கொடுத்து வருகின்றனர்.