கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் 155 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மேலும் தமிழக முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் காந்தி ஜெயந்தியை கொண்டாடும் விதத்தில் அவரது சிலைக்கும் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதோடு பல பகுதிகளில் கிராம சபை கூட்டங்களும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் கலந்து கொண்டார். மேலும் இந்த ஊர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் துணைவியாரான துர்கா ஸ்டாலின் சொந்த ஊராகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் உரையாற்றினார் அப்பொழுது திருவெண்காடு ஊராட்சிக்கு என்று தனி அதிகாரி நியமிக்கப்பட்டு ஆறு மாத காலத்திற்குள் ஊராட்சிக்கு தேவையான அனைத்தும் பட்டியலிடப்பட்டு அவை நிறைவேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஏனென்றால் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை தலைவர் எனக்கு பெற்று கொடுத்தார் இதற்கு முதலும் முழு காரணமாகவும் இருந்தவர் இந்த மண்ணில் பிறந்து தமிழகத்திற்கு தற்போது பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் துர்கா ஸ்டாலின் தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைப்பதற்கு பெருமளவில் உதவினார். அன்று கிடைத்த வாய்ப்பின் மூலம் தான் நான் இன்று அரசியலில் அமைச்சராக உயர் பதவியை பெற்றுள்ளேன் எனவே இந்த சமயத்தில் எனது நன்றியை நான் பதிவு செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். இதனால் அறிவாலய தரப்பில் இருந்து அமைச்சர் மெய்யநாதனுக்கு செம டோஸ் விடப்பட்டதாம்! காரணம் இதுவரை திமுக கட்சியை சேர்ந்த எவரும் அரசியல் ரீதியாக முதல்வரின் மனைவி பெயரை யாரும் பயன்படுத்தியது கிடையாது. எதற்கு இவ்வாறு இவர் பேச வேண்டும் ஏற்கனவே எதிர்க்கட்சியினர் முதல்வர் மனைவி கோவிலுக்கு செல்கிறார் ஆனால் முதல்வர் மற்றும் அவரது மகன் என அந்த கட்சி முழுவதுமே இந்து மதத்தை எதிர்க்கும் வகையில் சனாதன தர்மம் குறித்து தவறான கருத்துக்களையும் ஒழிப்போம் என பேசுகின்றனர், மனைவி மட்டும் கோவில் கோவிலாக செல்வார், கணவர் மற்றும் மகனுக்கு அந்த மதத்தின் மீது பற்று இல்லையா என்ற வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன நிலையில் நீங்களும் இப்படி கூறிய காரணத்தினால் முதல்வர் மனைவி குறித்து விமர்சனங்கள் அதிகமாகி வருகிறது, உங்களை யார் இப்படி கூற சொன்னாது என கடும் டோஸ் விடபட்டதாக தகவல்கள் கசிகிறது.
அதாவது ஏற்கனவே சனாதனம் குறித்து அமைச்ச உதயநிதிக் கூறிய கருத்துக்களின் கொந்தளிப்புகள் இன்னும் அடங்காமல் அங்காங்கு வெடித்துக் கொண்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு குறித்த விசாரணைகள் விரைவில் வர உள்ள நேரத்தில் துர்கா ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் மகள் ஆகிய இருவரும் மேற்கொள்ளும் கோயில் தரிசனங்கள் சிறப்பு பூஜைகள் பற்றிய தகவல்கள் வேறு கசிந்து வருகிறது, இந்த நிலையில் தேவையில்லாமல் அமைச்சர் முதல்வர் மனைவி பெயரை கூறி அரசியலில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்ததே துர்கா ஸ்டாலின் தான் என்று கூறியது பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது கூட்டத்திற்கு சென்றால் கட்சியின் பெருமைகளை எடுத்து கூற வேண்டியது தானே எதற்காக துர்கா ஸ்டாலினை குறிப்பிட வேண்டும் என அறிவாலயத்தில் இருந்து அவர் மீது கடிந்து கொண்டதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.