Cinema

அடி மேல் அடி கொடுக்கும் திமுக அரசு ? ...ஒரு படம் எடுத்தது தப்பா இயக்குனர் மைண்ட் வாய்ஸ்!

vijay, lokesh kanagaraj
vijay, lokesh kanagaraj

அரசியலுக்கு தளபதி விஜய் வருவது உறுதியான நிலையில், ஆளும் கட்சியான திமுக தளபதிக்கு நிறைய நெருக்கடி கொடுப்பதாக சமூக வலைதளத்தில் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இதனை கண்டு கொள்ளாமல் அடுத்த படத்திற்கு நகர்ந்து விட்டார் தளபதி விஜய்.தமிழில் மாநகரம் படம் மூலம் இயக்குனர்  அவதாரத்தை எடுத்து சினிமாவில் நுழைந்தார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தின் வெற்றியை தமிழ் திரையுலகமே கொண்டான்டினர். முதல் படம் போலவே மாநகரம் இல்லை என ரசிகர்கள் தெரிவித்தனர். அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இதுவரை எந்த இயக்குனரும் கொடுக்காத வகையில் கைதி படம் அமைந்தது. இந்த படம் வித்தியாசமாக முழுவதும் இரவு நேர காட்சிகளாக அமைந்திருந்தது. தொடர்ந்து விஜய், கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பெரிய ஹிட் படம் கொடுத்து இவருக்கென்று தனி ரசிகரா பட்டாளமே உருவாக்கினார். மேலும், லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்செல் (LCU) ரசிகர்களே தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். 


தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்-யை வைத்து இயக்கிய படம் "லியோ" இந்த படம் இந்த மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது. இதில் ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து  கிலிம்ப்ஸ், இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகளிர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. முன்னதாக படத்தின் ஆடியோ லான்ச் வெளியிட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தெரிவித்தனர். திடீரென்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் லியோ ஆடியோ லான்ச் இல்லை என தெரிவித்தது. மேலும், ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கின்ற காரணத்தாலும், பாதுகாப்பு காரணத்தாலும் ஆடியோ லான்ச் தடை செய்யப்படுகிறது என எக்ஸ் தளத்தில் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இந்த தடைக்கு திமுகவின் அரசியலே காரணம் என சமூக தளத்தில் கருத்துக்களை முன் வைத்தனர். சாதுவாக சென்ற ரசிகர்கள் அந்த அந்த மாவட்டத்தில் தளபதி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி எதிர்ப்புகளை தெரிவித்தனர். அந்த போஸ்டரில் "ஆடியோ லான்ச் இல்லை என்றல் என்ன ஆட்சியை பிடிக்கலாம்" என வசனம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் லியோ படத்தின் சிறப்பு காட்சிகள், ஆடியோ லான்ச் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து. இரு தினங்களுக்கு முன் லியோ படத்தின் ட்ரைலர் அக்.,05ம் தேதி, நாளை வெளியாகும் என அறிவித்தனர். இந்நிலையில் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. ரசிகர்களுக்காக எப்போதும் பெரிய ஹீரோக்களின் படம் வெளியாவதற்கு முன் படத்தின் ட்ரைலரை சிறப்பு காட்சிகள் போன்று திரையரங்கில் வெளியிடப்படும். அந்த வகையில் லியோ படத்தின் ட்ரைலரை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் வெளியிட முடிவு எடுத்திருந்தனர். அதற்கு தற்போது அனுமதி இல்லை என தகவல் வந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் கோவத்தில் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மேலும் திமுக அரசு தளபதியை சீண்டி வருகின்றனர் என ரசிகரக்ள் சமூக தளத்தில் திமுக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் என்ன பாவம் செய்தார் அவரின் படத்திற்கு எதற்கு இவ்ளோ எதிர்ப்பு என ரசிகரக்ள் வருந்தி வருகின்றனர்.