24 special

எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை இழக்கும் எடப்பாடி?...எல்லாம் கை மீறி சென்று விட்டது!

edapadi, thirumavalavan
edapadi, thirumavalavan

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டு தனிமையில் நாடாளுமன்ற தேர்தலையும், 2026 சட்டசபை தேர்தலையும் சந்திப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாஜகவில் இருந்து வெளியில் வந்த அதிமுக,  திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியை தன் வசம் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. பாமக வெளியில் சென்றாலும் விசிக-வை வைத்து தேர்தலை சந்தித்து சிறுபான்மையினர் ஓட்டுக்களை வெல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி மன கணக்கு போட்டுத்தான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். திருமாவளவன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதி ஆகியிருந்த நிலையில் எடப்பாடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இந்த செய்தி அறிந்த அரசியல் வட்டாரங்கள் விசிக கூடிய விரைவில் அதிமுக பக்கம் வரக்கூடும் என கருத்துக்கள் வெளியாகின. விசிக வந்தால் மார்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவில் இணையக் கூடும் என்று தகவல் வந்து கொண்டு இருந்தன. 


இது குறித்து எடப்பாடியிடம் கேட்டதற்கு விசிக தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது அரசியல் காரணம் ஏதும் இல்லை அவரது உடல் நலம் குறித்து மட்டுமே பேசினேன் என மறுப்பு தெரிவித்தார்.  இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை  நம்பி திமுகவில் இருந்து வெளியேற உடன்பாடு இல்லையாம். ஏன்னென்றால் பழனிசாமியின் அரசியல் வரலாறு அப்படி இருக்கிறது.  முன்னதாக சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்றினார் எடப்பாடி,  அதிமுக கட்சியை சசிகலா தான் இபிஸிடம் ஒப்படைந்தார், அவரையே கட்சியியல் இருந்து விலக சொன்னது நம்பிக்கை துரோகம்.  அதேபோல் அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணம் இருந்து வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். இருப்பினும் அதிமுக சின்னம் யாருக்கென்ற வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது பாஜவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுள்ளது. பல வருடம் அதிமுகவிற்கு உறுதுணையாக இருந்த பாஜகவையே வெளியில் தள்ளி விட்டது. அப்படி இருக்க நாளை நமக்கும் இப்படி தான் உறுதியான நிலைப்பாடு இல்லாமல் வெளியேற்ற வாய்ப்புகள் இருக்கிற காரணத்தால்.

எடப்பாடியுடன் விசிக கைகோர்ப்பது சாத்தியமில்லாத ஓன்றாக பார்க்கப்படுகிறது. விசிக வந்தால் தான் மார்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட் வரும் நிலை இருந்தது, தற்போது ஏதும் இல்லாமல் தனியாக தான் இருக்கிறார் எடப்பாடி அவசரப்பட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எடப்பாடியுடன் கூட்டணி அமைக்க தற்போது தமிழ் மாநில காங்கிரசும், புதிய தமிழகம் கட்சி என இரு கட்சிகள் மட்டும் தான் சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். இருவரும் மூன்று சீட் கேட்டு வருகின்றனர். இதனால் எடப்பாடி என்ன செய்வது தெரியாமல் தவித்து வருகிறார். ஆனால் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவை - பாஜகவுடன் இணைக்க தான் பேசி வருகிறார். அவரும் அதிமுக கூட்ணியில் இருந்து வெளியில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாம் மன வருத்தத்தில் இருக்கின்றனர். காரணம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் தான் நமக்கு பலம் என்று முன்னிறுத்தி தான் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏகே செல்வராஜ், அமல் கந்தசாமி உள்ளிட்டோர் சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர். விரைவில் இவர்கள் பாஜக பக்கம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. 

ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணி இல்லை என அறிவித்ததும் முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய போது அனைவரது முகத்திலும் புன்னகையை வெளிப்படுத்தினர், ஆனால் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மட்டும் அவசரப்பட்டிங்க எடப்பாடி என்பது போல் சோகத்தில் தென்பட்டார். எனவே எஸ்பி வேலுமணி  உட்பட வரும் காலத்தில் பாஜக பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக குறைந்த பட்சம் 10 சீட் வெல்லவில்லை என்றால் 2026 சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெற முடியாமல் சூழல் ஏற்படக்கூடும் என்றும் தற்போது  அரசியல் விமர்சகர்கள் பேசப்படுகிறது. பாஜகவில் இருந்து வெளியேறினால் சிறுபான்மையினர் ஒட்டு வரும் புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய விடும் என்று நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது.